பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 17

"கண் ஒளியுடன் மாறுபடும் வெயில் மிக வருத்தும் இடம் உடையதாய், மண் மேடுகள் பெருகிய, மரங்கள் கரிந்து உலர்ந்த காட்டை நம் காதலர் கடந்து சென்றாரோ? தம்மை மறக்காமல் வாழும் அவர் நம்மை மறந்தாரோ! மறந்தவரே ஆவார்” என்று தலைமகள் தலைமகன் பிரிந்த காலத்தில் தோழிக்குச் சொன்னாள்

20. தாங்கரிய நோய்! முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ முழங்கழல் அசைவளி எடுப்ப, வானத்து உருமுப் படு கனலின் இரு நிலத்து, உறைக்கும் கவலை அருஞ் சுரம் போயினர் - தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே. - ஐங் 320 தலைவி, “முள்கள் பொருந்திய அடிமரத்தையுடைய இலவ மரத்தின் ஒள்ளிய கொத்தில் மலர்ந்த வெண்மை யான மலர்கள், ஒலிக்கும் தீயையுடைய அலைப்பதற்கென எழுந்த காற்று மிக்கு வீசுதலால், வானத்து இடியில் பிறக்கும் நெருப்பைப் போல் பெரிய நிலத்தில் உதிரும் கவடுபட்ட வழியையுடைய அரிய காட்டைக் கடந்து சென்றாராயினும் நமக்குக் கெடாத பொறுத்தற்கு இயலாத நோயைத் தந்தாரே'

என்றாள்

இடைச்சுரம் 21. அவள் அருங்குணம் வருத்துகின்றது! உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை அலறு தலை ஒமை அம் கவட்டு ஏறிப் புலம்பு கொள விளிக்கும் நிலங் காய் கானத்து, மொழி பெயர் பல் மலை இறப்பினும், ஒழிதல்செல்லாது - ஒண்டொடி குணனே. - ஐங் 321 தலைவன், “உலர்ந்த தலையையுடைய பருந்தின் உளி போல் கூர்மையான வாயையுடைய பெண்பருந்து, இலை இல்லாமல் உலர்ந்து விரிந்து தோன்றும், ஒமை என்ற மரத்தின் அழகிய கவைக்கிளையில் இருந்து துன்பம்