பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

பட்டபோது ஆற்றாத தலைவிக்குத் தோழி வருத்தம் ஆற்றக் கூறினாள்

296. மறு பிறவியில் காதலனை மறப்பேனோ?

தோளும் அழியும், நாளும் சென்றென; நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் க்ாட்சி தெளவின; என் நீத்து அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே, நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ சாதல் அஞ்சேன், அஞ்சுவல், சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின், மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே,

- அம்மூவனார் நற் 3:97 "அவர் வருவதாகக் குறித்த பருவம் கழிந்தது அதனால் என் தோள்களும் மெலிந்தன அவர் சென்ற நீண்ட காட்டு வழியை நோக்கி நோக்கி என் கண்களும் ஒளியற்றுக் காணும் தன்மையை இழந்தன என்னைக் கைவிட்டு அறிவும் மயக்க மடைந்து வேறுபட்டது நோயும் பெருகியது, மாலைப் பொழுதும் வந்துவிட்டது யான் எப்படி ஆவேனோ? இங்கே யான் சாதலுக்கு அஞ்சேன் ஆனால் வேறொன்றிற்கு அஞ்சு வேன் இறந்தபின் பிறப்பு வேறொன்று என்னைப் பெரிதும் வாட்டுகிறது மற்றபடி யான் ஆற்றுவேன்” என்று பிரிவை ஆற்றாத தலைவியை ஆற்றி இருக்கக் கூறிய தோழியிடம் தலைவி இவ்வாறு சொன்னாள்

sహి 苹