பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 :ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பரல் மண் கவல முரண் நிலம் உடைத்த வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல், வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் பெருங் கல் அத்தம் விலங்கிய காடே

- காவன் முல்லைப் பூதனார் அக 21 “என் நெஞ்சமே, நம் காதலி, வீட்டின் முன் பக்கத்தில் வளர்ந்துள்ள நொச்சியின்மீது படர்ந்துள்ள முல்லைக் கொடியினது வெண்மையான அரும்புகளை வரிசையாய் வைத்தாற் போன்ற, வண்டுகள் விரும்புதற்குக் காரணமான வெண்மையான பற்கள், அழகிய வயிறு, பரந்த அல்குல், பின்னப்பட்டுத் தாழ்ந்த கூந்தல், மெல்லிய மூங்கில் போன்ற, தோள் ஆகியவற்றை உடையவள் அவளது மாட்சிமை யுடைய பெண்மை நலம் முழுவதும் துணையின்றித் தனிமை அடைந்து வருந்துமாறு அவளைப் பிரிந்து தொலைவில் உள்ள நாட்டுக்குச் செல்லாதே என்று யான் சொல்லவும் நீ அதற்கு உடன் படாமல் பொருளீட்டுதலை விரும்பி இது வரை வந்தாய் ஆதலால், நீ எண்ணியபடியே வினைமீது சென்று நம் இல்லம் விளக்கம் அடையுமாறு பலவகைப் பட்ட செல்வங்களையும் முயன்று திரட்டி வருவோம்! இன்பத்தை விரும்பாதே வலப்பக்கமாகச் சுரிந்த பூங் கொத்துகள் மெத்தென்று மல்ர்கின்ற அழகிய கிளைகள் அம் மலர்கள் உதிரப் பெற்று வறிதாகுமாறு உடல் வலிமை யுடையவன் ஒருவன் அக் கிளைகளை அடிக்கின்ற கோல் போன்று மலர்கள் உதிரப் புடைத்து மரா மரத்தை அசைத்த லால், அம் மலரின் மணம் தனக்கும் வாய்க்கப் பெற்றது தென்றற் காற்று அது, பாலை நில வழியில் செல்லும் போர் மறவரின் சுருண்ட மயிரின் மீது அந்த மலர்களைச் சொரியும் அங்கு வெயிலின் வெப்பம் நிலைத்து நிற்கும் இடங்களை உடையவை ஊர்கள்

அத்தகைய ஊர்களில் பருந்துகள் முட்டையிட்டு அடை காப்பதற்கு இடமான வற்றிச் சிதறிய துணிகளையுடைய ஒமை