பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 207

மரங்களையுடைய மலையின் குகையுள் குட்டிகளை ஈன்று அவற்றைக் காக்கின்ற ஈன்றணிமையுடைய பெண்நாய், பசி யோடிக்கும் என எண்ணி இரங்கிப் பசுமையான கண்ணை யுடைய செந்நாயான ஆண் தாய், தன் பெட்டைக்கு இரை தருதற்காக, ஆன் பன்றியைத் தாக்கி வீழ்த்தும் அதனால், அச்சத்தால் கெட்டு ஓடும் பெண் பன்றி உராய்தலால அறு பட்டுச் செங்காய்கள் உதிர்ந்த பசிய குலைகளையுடைய ஈந்தின் முதிராத விதைகள் பரவிய மண்ணையுடைய வன்னிலம் அதைக் கூழுண்ணும் இயல்புடைய, கிணற்றைத் தோண்டும் தொழிலுடையோர் தம் வலிய வாயையுடைய குந்தாலியால் தோண்டுவர் அதினின்று நீர் வராமையினால் கைவிட்டுப் போவர் சருகுகள் நிரம்பிய வறிய கிணறு அது

அக் கிணற்றை, பெரிய ஆண் யானைகளும் அவற்றின் பெண் யானைகளும் கன்றும் ஆகிய கூட்டம், தம் வெண்மை யான கொம்புகளைக் கொள்ள எண்ணிய அன்பில்லாத கொடியவர்களான வேடர்கள் தமக்குத் துன்பம் வரும் என எண்ணாமல் தம் மனம் போனபடி திரியும் வழியில், தம்மை வீழ்த்திப் பற்றிக் கொள்வதற்காக வஞ்சகமாய்த் தோண்டிச் சருகால் மூடி வைத்த குழி என எண்ணிக் கல் முதலியவற்றால் துர்க்கும் பெருங்கற் குவியல்கள் வழிகளைத் தடுக்கும் இத் தகைய காட்டில் யாம் செல்வதற்கு இனி நெஞ்சே இப் போதே விரைந்து எழுந்து வருவாயாக!” என்று பொருள் தேடப் பிரிந்த தலைவன் இடைவழியில் மீளலுள்ளபோது நெஞ்சிற்கு இவ்வாறு கூறினான்.

308. தலைவர் மீண்டுவரும் காலம் இதுவோ? மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், பாடு உவந்தன்றே, பறைக் குரல் எழிலி: புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக் காடே கம்மென்றன்றே; அவல கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் பதவின் பாவை, முனை.இ, மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணைதழி.இ.