பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே, அணையகொல் - வாழி, தோழி! - மனைய தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் மெளவல், மாச் சினை காட்டி அவ் அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!

- ஒரோடோகத்துக் கந்தரத்தனார் அக 23 "தோழியே! முரசின் குரல் போன்ற ஒலியையுடைய கொண்டல் இந் நிலத்தில் உள்ள இடம் எல்லாம் குளிர, மழையைப் பெய்து ஒலியடங்கியது புதரின் மீது படர்ந்த செம் முல்லையின் சிவல் முள்ளைப் போன்று சிவந்த அரும்பு, நெருங்கிய குலையையுடைய பிடாவின் அரும்புடன் ஒருங்கே கட்டவிழ்ந்து விரிந்து மலர, அதனால் காடு கம் மென்று மணம் கமழ்வதாயிற்று பள்ளங்களில் உள்ள சங்கு உடைந்தது போன்று விளங்கும் வெண்காந்தளின் பசிய பயிருடன் அறுகங்கிழங்கையும் தின்று தெவிட்டுதலால் வெறுத்துச் செருக்கிய நடையையும் தலைமையையும் உடைய ஆண் மான் பெண் மானைத் தழுவிக் குளிர்ந்த நீரைப் பருகி ஒரிடத்தே தங்கி விட்டது இல்லத்தில் உள்ள முல்லை மலரும் இடமான குறிய நொச்சியின் கரிய சினையைச் சுட்டிக் காட்டித் தாம் வேற்று நாட்டில் இருந்து பொருள் ஈட்டும் காலத்து எல்லை அம் முல்லைக் கொடி பூக்கத் தொடங்கும் கார்ப் பருவத் தொடக்கமே தாம் திரும்பிவரும் என்று கூறினார் அல்லரோ? இக் காலம் அதுதானோ?அதையும் தாண்டி நிற்பதோ! கூறுவாயாக!” என்று தலை மகன் பிரிந்தபோது தலைவி தோழியைக் கேட்டாள்

309. விரைவில் வருவார் தலைவர் “நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்,

அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் பைந் தாது அணிந்த போது மலி எக்கர், வதுவை நாற்றம் புதுவது களுல, மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் படு நா விளி யானடுநின்று, அல்கலும்