பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

நினது நோதலையுடைய மையுண்ட கண்கள் நீர் வடிந்துச் சொரிந்து கொண்டிருக்கத் தலைவர் வாராமையினால் வெறுத்த நெஞ்சுடன் வருந்தாதே

திதியன், போர் செய்யும் பகைவர் எதிர்த்து வரும் போரை வென்ற வில்லைக் கொண்ட கையை, உடையவன் பொதிய மலைக்குரிய செல்வன் பொன்னால் ஆன தேரினை உடையவன்; அவன்து இனிய வெற்றி முரசினைப் போல் ஒலிக்கும் மலையுச்சியினின்று விழும் அருவிகளையுடைய க்ாடுகளைத் தாண்டிப் பொருள் ஈட்டுதற்குச் சென்ற நம் தலைவர், இளையவளே, நீ இங்ங்னம் துன்பம் அடையு மாறு செய்த என் உயிர் வருந்துவதாக!' என்றாற் போல், இனிய சொற்களைப் பேசிக் கொண்டு விரைவாக வருவார் எனவே, கவலை கொள்ளாதே' என்று பருவம் கண்டு அழிந்த தலைவியைத் தோழி ஆற்றுவித்தாள்

310. நின் பார்வை பிரிந்துசெல்ல விடாது “கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை

ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் கடிய என்னார், நாம் அழ, நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், செல்ப' என்ப, என்போய்! நல்ல மடவைமன்ற நீயே, வடவயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, மறப்போர்ப்பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப யாங்ங்ணம் விடுமோ மற்றே - தேம் படத் தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் குருதியொடு துயல்வந்தன்ன நின் அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?

- மதுரைக் கணக்காயனார் அக 27.