பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 211

“வளைந்த கோடுகளையுடைய பெரிய புலி, வெளிப் பட்டுத் தோன்ற, நீண்ட மன்லயில் அசையும் தண்டையுடைய வன்மையான மூங்கில்கள் அவை மேல்காற்று மோதுதலால் வளையும் அத்தகைய காட்டு நெறி. அது கொடியது என எண்ணாமல் நாம் பிரிவால்' அழுது கொண்டிருக்க, ஒரிடத் தும் நிலைத்து நில்லாத பொருட் பற்றினால் பிரிந்து போய், அப் பொருளை ஈட்டிவரத் தலைவர் சுரம் செல்வர் என ஊரார் உரைப்பர் எனக் கூறும் தன்லவியே, நீ பெரிதும் அறிவிலியே ஆவாய்.

"வடக்குத் திக்கில் உள்ள வேங்கடமலை தோற்றுவித்த வெண்மையான கொம்புகளைக் கொண்ட சிறந்த யானைப் படையினாலே மறத் தன்மை கொண்ட போர்த் தொழில் செய்கின்ற பாண்டிய மன்னர் அறநெறி நின்று காவல் செய்கின்ற கொற்கைப் பட்டினத்துக் கடலினது பெரிய துறையில் குளிக்கும் உயர்ந்த முத்துகளைப் போன்ற புன் முறுவலால் சிறந்து விளங்கும் நின் பற்கள் பொருந்திய, பவளம் போன்ற நின்வாய் ஒன்றே அவர் நின்னைப் பிரியாது தடுப்பதற்குப் போதுமானதன்றோ! அவ்வாறு தடுப்பதால் தடைப்பட்டுத் தங்காராயினும், தேன் உண்டாகத் தெளிந்த நீரை ஏற்ற திரண்ட தண்டையுடைய குவளை மலரின் சிறந்த அழகைக் கெடுத்தும் அமையாது, பருந்துகள் வந்து சூழ மன்னர் தம் போர்களை வென்ற வெற்றி பொருந்திய நல்ல வேல் இரத்தம் தோய்ந்து பிறழ்வது போன்ற நின் சிவந்த வரிகள் படர்ந்த மையுண்ட கண்ணின் பார்வை, அவர் உன்னை நீங்கிச் செல்ல எவ்வாறு விட்டு விடும்? விடாது ஆதலால் நீ வருந்தாதே" என்று செலவு உணர்ந்து வேறு பட்ட தலைவிக்குத் தோழி இயம்பினாள்

31. நின்னிடமே இருந்தது என் நெஞ்சம் “தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,

கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின் வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச் செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று