பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 213

வினவும் அழகிய அணிகளை அணிந்தவளே இப்போது யான் கூறுவதைக் கேட்பாயாக :

வெம்மை குறையாத தீப்பொறி பறக்கும் பாழிடத்தே உணவின்மையாலே உடலின் பருமை குறையப்பெற்ற யானை கள் நீர் உள்ள இடம் அறியாமல், கானல் நீர் தோன்றும் இடம் எல்லாம் ஒடி நீர் இல்லாத ஆற்றில் சிக்கிக் கிடக்கும் ஒடத்தைப் போன்று வழியிடத்து வருந்திக் கிடக்கும் காடு அது நினைப்பவரை நடுங்கச் செய்யும்; ஊக்கமானது அழியும்; அத்தகைய காட்டில் சென்று, மற்றவர் இகழ்வதைப் பொறுத்துக் கொள்ளாது பொருள் ஈட்டி வரும் விருப்பத் துடன் தொடங்கிய செயலை முடிக்க வேண்டும் என்ற மானமே அத் தொழிலுடன் கட்டும் கயிறாகக் கட்டுண்டிருந் தேன்; மாட்சிமையுடைய பொருள் ஈட்டும் செயல் செய்தற்கு இன்றியமையாத என் உடல் மட்டும் அயல் நாட்டில் இருந்ததே அல்லாமல் அறியாமையுடைய என் உள்ளமோ எப்போதும் உன் பக்கத்திலேயே இருந்தது அங்கனமானால் உனக்குக் கூறிய மொழியை நான் மறப்பதும் முடியுமோ” என்று வினைமுற்றி மீண்ட தலைவன், எம்மை நினைந்த்ரோ என்ற தலைவிக்குக் கூறினான்

312. தலைவரைப் பழிப்பவர் இல்லையே நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, 'நிலம் புடை பெயர்வது அன்றுகொல், இன்று? என மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, இலை இல ஓங்கிய நிலை உயர் யா அத்து. மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்குக், கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், கணவிர மாலை இடுஉக் கழிந்தன்ன புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர். கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி சென்றார் என்பு இலர் - தோழி - இன்ன்றிiெrடு. வில் அலைத்து உண்ணும் வல் ஆண் iழ்க்கைத்