பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 217

“தலைவ! வானை அளாவிய மதில் பொருந்திய நல்ல இந்த இல்லமானது தனிமையை அடையப் பெற்று, வளர்த்த எம்மையும் எண்ணிப் பாராது என் மகள் சென்றாள். அவள் சென்ற வழி ஒப்பில்லாத மணி மாறி மாறி ஒலிப்பதும், கடையாணி இடப்பட்ட காம்பையும் கூர்மையான முனையை யும் உடையதுமான நீண்ட வேலை உடையவராய் வெட்சி யாரின் போர் முனையில் அவரை வென்று பசுக்களை மீட்டு அவ் வெட்சியாரை வீழ்த்தினர். பின் அவரால் கொல்லப் பட்டனர்; அவர் வில்லையே ஏராகக் கொண்டு வாழும் வாழ்க்கையை உடைய சிறந்த கரந்தைப் போர் வீரர். அவர்தம் உடலை மூடிய வலிய ஆண் தன்மைக்கு அறிகுறியான கற்குவியலின் மேல் நின்ற தெய்வத் தன்மையுடைய அந்தக் கரந்தை வீரர் ஆவியை வழிபடுதற்கு அந்த மறவரின் பெயரும் பெருமையும் பொறித்து நாட்டப் பெற்ற நடுகல்லில் மயிற் பீலியைச் சூட்டித் துடியை அடித்து, நெல்லினால் ஆக்கிய கள்ளுடன் செம்மறி ஆட்டுக்குட்டியையும் பலி கொடுக்கும் இயல்புடைய, செல்வதற்கு அரிய பாலைவழி அதில் என் மகள் செல்லத் துணிந்தாள், இதனால் அவள் என்னை அயலாள் ஆக்கினாள்.

என்றாலும், இடைவிடாது முழவின் இனிய ஓசை ஒலிக் கின்ற திருக்கோவலூரையுடைய மன்னனான பெருந் தேரை உடையவன். மலையமான் திருமுடிக்காரி. அவனது கொடுங் கோல்’ என்ற ஊரில் உள்ளதான பெண்ணை என்ற ஆற்றின் அழகிய துறையில் உள்ள கரிய மணலை ஒத்த நெளிந்த கரிய கூந்தலையுடைய என் மகளுக்கு அறியாதவர் உள்ள நாட்டில் அவளை அழைத்துச் சென்றான் அவளுடைய துணைவன்.

அவன், அன்பு மிகுந்த உள்ளத்துடன் மலர் முதலிய வற்றால் அவளைப் பலகாலும் அழகு படுத்தி நோக்கி; அவளது அழகிய நலனை நுகர்ந்து தன் மார்பே பற்றுக் கோடாகத் துயிலச் செய்வானாக!” என்று மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திடம் முறையிட்டாள்.

315. துணை இருப்பவர்க்கே பருவம் உரியது மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் கங்குல் ஒதைக் கலி மகிழ் உழவர்