பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 219

களையுடைய மா மரத்தில் கிளி வடிவில் காய்த்துள்ள காய் களைக் கொத்தாகப் பறித்துப் புதிய மண் குடத்தில் இட்டுப் புளிப்புச் சுவை உண்டாகுமாறு பதப்படுத்திய அக் காய்களி னின்று பெருகிய சாற்றை, வெயிலில் முதுகுப்பக்கம் வாட வைத்தால் வேண்டியபடி விளையும் பனையோலையால் ஆன குடையான உண்கலத்தில் வார்த்துக் குளத்து நீரில் வாய் வைத்துப் பருகும் எருமைக் கடாக்களைப் போல் வாயால் வேண்டுமளவு பருகுகின்றனர். பின்பு கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து சமைத்த வெள்ளிக்கம்பியை ஒரளவாகத் துண்டுசெய்து இட்டது போன்ற வெண்மையான சோற்றுப் பருக்கைகளையுடைய கூழையும் வயிறாரப் பருகி இனி வேண்டா என வளைந்த கையால் தடுக்கின்றனர். பின்பு மருத மர நிழலில் வட்ட வடிவாகக் குவித்து வைத்த அழகிய நெற் குவியலைச் சூழ்ந்து தம் எருதுகளுடனே தங்குகின்றனர். இத்தகைய இளவேனில் பருவம் இது இப் பருவத்தில் பிரிந்து வாழ்பவர் ஆற்றி இருத்தலும் முடியுமோ” என்று தலைவன் பிரிவை ஆற்றுவித்த தோழிக்கு எதிராக தலைவி இவ்வாறு கூறினாள்.

316. நீ ஊடுதல் முறையன்று 'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,

உள்ளியும் அறிதிரோ, எம்? என, யாழ நின் முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, நோய் முந்துறுத்து நொதுமல் மொழியேல், நின் ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை முளி புல் மீமிசை வளி கழற்றுறாஅக் காடு கவர் பெருந் தீ ஒடுவயின் ஒடலின், அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு மதர் புலி வெரீஇய மையல் வேழத்து இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றல் பட்டென கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,