பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

போன்று மணக்கும் பலவான கூந்தலையும், நறுமணம் -உடைய நெற்றியையும், மென்மையான சாயலையும் கொண்ட நம் காதலியின் நல்ல அழகுடைய மேனியைச் சேர்ந்தோம் இப் பருவத்தில் இரக்கம் இல்லாது பொருள் ஈட்டும் பற்றுக் கொண்டு பிரிந்து போய்த் தம் இனிய தலைவியைப் பிரியும் அறிவிலிகள் எம்மால் எப்போதும் இரங்கத்தக்கவரே ஆவார்” என்று தலைவன் பொருள் கடை கூட்டிய நெஞ்சிற்கு உரைத்தான்

319. 'ஆதிமந்தி போல வருந்துவேனோ' வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அளிப்பன ஒலிப்பக், கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன.களிறு அட்டு ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் காடு இறந்தனரே, காதலர், மாமை, அரி நுண் பசலை பாஅய், பீரத்து எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் இன் இசை ஆர்ப்பினும் பெரிதே, யானே, காதலற்கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, ஆதிமந்தி போலப், பேதுற்று அலந்தனென் உழல்வென்கொல்லோ - பொலந்தார், கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய உடை மதில் ஒர் அரண் போல, அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!

- வெள்ளி வீதியார் அக 45 "தோழியே, நம் காதலர் மழை இல்லாமையால் வற்றிய வாகையின் முதிர்ந்த நெற்றுகளைக் கொண்ட கொத்து, கூத்தாடும் களத்தில் ஒலிக்கும், கோடைத் தன்மை கொண்ட அகன்ற பெரிய குன்று. அதில் உள்ள நீர் இல்லாத அரிய