பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

குறு நடைப் புறவின் செங் காற் சேவல் நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் புலம்பொடு வந்த புன்கண் மாலை, 'யாண்டு உளர்கொல்? எனக் கலிழ்வோள் எய்தி, இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் மழை விளையாடும் வளம் கெழு.சிறுமலைச் சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் வேய் புரை பணைத் தோள் பாயும் நோய் அசா விட, முயங்குகம் பலவே.

- ஆலம் பேரி சாத்தனார் ஆக 47 “என் நெஞ்சமே, நாம் மேற்கொண்ட வினைகெடுமாறு வருந்தாதே, நீ வாழ்க! தளர்ச்சி இல்லாத நம் உள்ளம் மேலும் மேலும் ஊக்கத்தாலும் சிறப்ப, இங்கு யாம் மேற் கொண்டிருக்கும் பொருள் ஈட்டும் வினையை நன்றாக முடித்தோமானால், சூறைக் காற்றானது, தழைத்த தலையை யுடைய அசையும் மூங்கிலை ஒலி ஏற்படும்படி தாக்கி வெப்பமுறச் செய்ததால் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீயானது பிளப்பையும் முழைஞ்சினையும் உடைய மலைப் பக்கங்களில் பரவுவதால் மூங்கில் கணுக்கள் வெடிக்கும் அதனால் எழும் ஒலி கூட்டமான கலைமான்களைத் துரத்தும் கொடிய போர் நிகழும் இடங்களை உடையது அரிய பாலை

©ᎣJ

ழி

அதனைக் கடந்து, பெரு ஞாயிறு மேற்கு மலையைச் சேர்ந்து மறைய, இல்லங்களில் ஒளிமிக்க வளைகளையுடைய மகளிர் விளக்கில் உள்ள வெண்மையான திரியைக் கொளுத்து வர் அப்போது குறுகிய நடையையுடைய சிவந்த காலை யுடைய ஆண் புறா உயர்ந்த மேல் நிலைகளையுடைய பெரிய மனையில் தன்னிடம் அன்புள்ள பெடையை அழைக்கும் இத்தகைய மாலைப் பொழுதில், 'நம் தலைவர் இப்போது எங்கு உள்ளாரோ? என எண்ணிக் கலங்கி அழுது கொண்டி ருப்பாள் தலைவி, அவளை அடைந்து, அணிகள் அணியப் பெற்ற பெரிய தேரையுடைய கொடைத்தன்மை பொருந்திய செழியனின் முகில்கள் தங்கும் வளம் பொருந்திய சிறுமலை என்ற பெயரையுடைய குன்றின், கூதாள மலர் மணம்