பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் 3: 227

கமழும் பக்க மலையிலே வளம் உண்டாக வளரும் மூங்கில் போன்ற தோள்களில் பரவும் நோய் வருத்தம் நீங்கப் பல முறையும் தழுவுவோம் ஆதலால் நெஞ்சே, இப்போது வினையின் பொருட்டு என்னுடன் மிக விரைந்து எழு வாயாக!” என்று பாலை நிலத்து இடைவழியில் வருந்திய தன் நெஞ்சிற்குத் தலைவன் உரைத்தான்

321. சென்றனளே என்மகள் 'கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் அளியும் அன்பும் சாயலும் இயல்பும் முன்நாள் போலாள்; இlஇயர், என் உயிர் எனக் கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, குறுக வந்து குவவுநுதல் நீவி மெல்லெனத் தழீஇயினேனாக என் மகள் நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்பப் பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ! விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் காடு உடன்கழிதல் அறியின் - தந்தை அல்குபதம் மிகுத்த கடியுடை வியல் நகர் செல்வழிச் செல்வழி மெய்ந்நிழல் போலக் கோதை ஆயமொடு ஒரை தழிஇத் தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே!

- வண்ணப்புறக் கந்தரத்தனார் அக 49 "பைங்கிளிக்கு மழலை பேசக் கற்றுக் கொடுத்தலையும் பந்தாடுதலையும் கழங்காடுதலையும் மிகுதியாய் விரும்பும் என் மகள் இப்போது அவற்றை விரும்புவதில்லை இவள் பிற 'உயிர்களிடத்துக் கொள்ளும் அருளாலும் சுற்றத்தாரிடம் காட்டும் அன்பாலும் தன் உடலில் உள்ள மென்மையாலும் செயலாலும் முன் நாள்களில் இருந்தாற்போல் இல்லை இதற்குக் காரணம் காணமாட்டாது வருந்தி என் உயிர்