பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேத்தன் ; 229

வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி பல் இதழ் மழைக் கண் மா அயோள்வயின் பிரியின் புணர்வது.ஆயின், பிரியாது, ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப, நினை - மாண் நெஞ்சம் - நீங்குதல் மறந்தே.

- ப்ெருந்தேவனார் அக 51 "ஆள்களின் நடமாட்டம் இல்லாத பாலை வழி அங்குக் ஞாயிற்றின் கதிர்கள் காய்வதால் மிகுந்த வெப்பம் பரவி யுள்ளது நீண்ட அடியையுடைய யா என்ற மரத்தில் ஊடுருவிச் செல்லும் காற்று முழங்கும் பொலிவில்லாத உயர்ந்த கிளையில், புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பெட்டை யின் முகத்தைப் பார்த்து, ஊன் துண்டு ஒன்றைப் பதித்து வைத்தாற் போன்ற சிவந்த செவியையுடைய ஆண் பருந்தின் இறகு கரிந்து தீய்ந்திடும். இத்தகைய வேனில் வெம்மை மிக்க மூங்கில் உயர்ந்த அகன்ற காடு t அக் காட்டில், நீ வருத்தப்பட்டுச் செய்யும் வினைகளால் அடையப்படும் பொருள், பல இதழ்களை உடைய மலர் போன்ற கண்ணை உடைய நம் தலைவியிடத்தினின்றும் யாம் பிரிந்து செல்வதால் கைகூடுவதானால், மனமே.நீ இப்போது நம் தலைவியை விட்டுப் பிரிந்து போவதை மறந்து அவளைப் பிரியாமலே நாள்தோறும் நம் தாதலியின் உயர்ந்த கொங்கைகள் விம்மவும், அணிகள் ஒலிக்கவும்:ல முறை தழுவி, அவள் இல்லத்தில் இருந்து செய்யும், விருந் தோம்பல் முதலிய செயல்களில் அவளுடன் மகிழ்த்திருக்கவே எண்ணுவாயாக பொருள் வயின் பிரிவைக் கைவிஇடியாக” என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

323. பொருளே நம் தலைவர் விரும்புவது

அறியாய், வாழி தோழி இருள் அற. விசும்புடன் விளங்கும் விரை செலுல் திகிரிக், கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,