பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 231

விட அதிகமாகக் காதலித்தது பொருளையே ஆனால் நீயோ காதலரின் காதல் நம்மிடம் அருளே என்கின்றாய் ஆதலால் நீ அறியாய்” என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைவி எதிருரை கூறினாள்

324. நீங்கவில்லையே என் உயிர் காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், ஈந்து குருகு உருகும் என்றுழ் நீள் இடை, உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், விளி முறை அறியா வேய் கரி கானம், வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேன், கனவ - ஒண் படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாகன் அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென, இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், பெரும்பிறிது ஆகியாங்கு, பிரிந்து இவண் காதல் வேண்டி, எற் துறந்து போதல் செல்வா, என் உயிரோடு புலந்தே.

- மாமூலனார் அக 55 "அன்புடையவரே, கேளுங்கள், இம் மண்ணுலகத்தை வெப்பப்படுத்தி வானத்தில் இயங்கும் கதிரவன் மலையும் பிளக்குமாறு காய்ந்திடலால் கடந்து செல்லும் பறவைகள் வருந்துவதற்குக் காரணமான வெப்பம் மிக்க நீண்ட இடத்தில், உளியைப் போன்ற முனையையுடைய கொடிய பரற்கற்கள் அடியில் பதிந்து வருத்துதலால், அவ் வழியில் இறக்கும் இடம் எது என்று அறியலாகாத் மூங்கில் கரியும் காடு அக் காட்டில் வலிய ஆண் யானையைப் போன்ற ஆடவனுடன் என் மகள் உடன் போனதற்காக நான் வருந்தவில்லை; அவள் போய்த் தொலையட்டும்