பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 235

யமுனை ஆற்றின் மணலை உடைய அகன்ற துறையில், நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக்கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்தத் தந்தான் கண்னன். அவனைப் போல, ஆண் யானை, இளைய பெண் யானை அழகிய தளிரை உண்ணுதற்கு முன்பு உயர்ந்த நிலையை உடைய யா மரத்தை வளைத்துத் தந்து, மத நீரால் நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஒட்டும். அத்தகைய நிகழ் வைக் கண்டு தலைவர் மீண்டு வருவார். அதுவரை நீ ஆற்றி யிருத்தல் வேண்டும்” என்று தலைவன் பிரிவினால் வேறு வட்ட தலைவிக்குத் தோழி கூறினாள்.

327. அயல் நாட்டில் தங்கியிரார் தலைவர்

நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனத் தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் - நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து ஆழல் வாழி, தோழி - தாழாது, உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண் கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் கழல் புனை திருந்தடிக் களவர் கோமான் மழபுலம் வணக்கிய மா வண் புல்லி விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலைப் பொலிந்த நுண் பூண் அகம் பொருந்துதல் மறந்தே.

- மாமூலனார் அக 51 "தோழியே வாழி! கேட்பாயாக இயமனால் கொள்ளப் பட்டு இறவாமல் மற்றவர் தம் பொருளைக் கொள்ளும் படியாக நன்முயற்சியில் தலைப்பட்டு அது காரணமாக உயிர்