பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ; 239

“பொலிவுடைய கூந்தலை உடையவளே, தோழியே வாழி நம் தலைவர், மலைகள் தோறும் பெரிய மூங்கில்கள் உராய்ந்து கொள்வதால் உண்டாகிக் காற்றும் கூட்ப் பெறுத லால் மிக்கு எரியும் தீடச் சுடர்கள், கடலில் மீனைப் பிடிக்கும் பரதவரின் வளைந்த படகில் தோன்றும் மிக்க சுடர்கள் வானத்தை அளாவிய கடல் அலைமீது காணப் படுவது போல் விளங்கும் யா என்ற மரங்கள் உயர்ந்துள்ள அகன்ற பாலையிடத்தில் பசியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து செல்வது போன்று, பாறையில் ஏறியும் இறங்கியும் செல்லும், மூங்கில்கள் சாய்ந்த சிறிய வழிகளை உடையவும் காட்டினை மேம்படச் சொல்வதற்குக் காரணமான கொம்புகளையுடைய ஆண் யானை வழியைக் காவல் மேற்கொண்டிருப்பதற்கு மணம் கமழும் கூந்தலையும் திரண்ட தேமலையுடைய முலையையும், பூப்போன்ற கண் களையும் உடைய மகளிர்க்குச் செல்ல அரியனவாகும் எனக் கூறி, இதுகாறும் தலைவர் தடுத்து வந்த உடன் போக்கினை அதனை, அடர்த்தியான கூந்தலை உடையவளே! இன்று உடன் போக்கைத் தடுத்த நம் தலைவரே நம் எண்ணத்துடன் ஒன்றுபட்டவராய் உடன்போக்கை விரும்பினார்

நம் எண்ணத்தை உணர்ந்து கொண்ட உணர்வுடன் அதனைத் தன்னுள்ளத்தில் மறைத்துக் கொண்டிருக்கின்ற நம் அன்னை கூறும் இன்னாச் சொல்லைக் கேட்டு வருந்தும் வருத்தத்தினின்றும் தப்புவோம் அதுவுமே அல்லா மல், அன்பு சிறிதும் இல்லாதவரும் பொய் கூறுபவருமான இவ் ஊர்ப் பெண்டிரின் அலரினின்றும் தப்புவோம் பிற நாட்டை வென்று கொண்டமையால் தன் நாட்டை விரிவு படுத்திய உதியஞ் சேரலாதனைப் பாடிச் செல்லும் பரிசில ரைப் போல் இப்போது மகிழ்வாயாக!

330. கொடியதாயிற்றே தலைவர் சென்ற வழி யான் எவன் செய்கோ? தோழி பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும், அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,