பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அரம் போழ் நுதிய வாளி அம்பின், நிரம்யா நோக்கின், நிரயம் கொண்மார், நெல்லி நீளிடை எல்லி மண்டி, நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, 'உரு இல் பேஎய் ஊராத் தேரோடு நிலம் படு மின்மினி போல, பல உடன் இலங்கு பரல் இமைக்கும் என்ப- நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!

- நோய்பாடியார் ஆக 67 தோழி! நம் இன்பத்தைக் கைவிட்டுத் தலைவர் சென்ற வழி, புள்ளியையும் வரிகளையும் உடைய வானம்பாடிப் பறவை மழைத்துளியை வேண்டிப் பாடவும், சிறிதும் இரக்கம் இல்லாமல் மழைதுளித்தலின்றி முகில் வானத்தினின்று அகன்று போயது; அதனால் இலைகள் கரிந்து தேய்ந்த நிலைமையுடன் மரங்கள் வற்றிப் பொலிவில்லாமல் போயின பருக்கைக் கற்களைக் கொண்ட அகன்ற பாலை நிலப்பரப்பு அதில் அரத்தால் அராவிப் பிளந்த பிறைவாய் அம்பையும் இடுங்கிய நோக்கையும் உடையவராய் வந்து பசுக்கூட்டத்தைக் கவர்பவராகிய வெட்சி மறவரையுடைய நெடிய வழி இடங் களில், இரவில் போய் வளைத்து அறப்போர் செய்து வென்று இறந்துவிட்ட கரந்தை வீரருள் மானப் பண்புடைய மறவரின் பெயரும் வீரச் சிறப்பும் பொறிக்கப்பட்டு நெறி தோறும் மயில் தோகை அணியப்பட்ட நிலைமையுடைய நடுகற்கள் நாட்டப்பட்டிருக்கும் அங்கு அந்தந்த மறவர்கள் கைக்கொண்டிருந்த வேல்களை நட்டுக் கேடயங்களுக்கு சார்த்தப்பட்டுள்ளன. அவை போர்க்களத்தைப் போல் காட்சி தரும் இயல்புடையவை அத்தகைய மொழி வேறுபட்ட வேற்று நாட்டைக் கைக்கொள்ள வேண்டித் தம் கழியில்