பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 常 23

கல்லுடை நல்நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு,

'யாஅம் துணை புணர்ந்து உறைதும்,

யாங்குப் பிரிந்து உறைதி என்னாதவ்வே. - ஜங் 333

தலைவி, "தோழியே, கேட்பாயாக. அவ் இடத்தாகிய மலைகளையுடைய நல்ல நாட்டில் பெருந்தொகையாய் உள்ள பறவைகள், நம் தலைவரை நோக்கி, "ஐய, யாம் எம் துணை யின் பிரியாது கூடியிருக்கின்றோம் இல்லையா, அங்ங்ன மிருக்க நீ இவ்வாறு பிரிந்து வந்தனையோ?” என்று சொல்லித் தலைவன் செலவைத் தடுக்காது ஒழிந்தன. ஆதலால் அவை சிறிதும் வன்மையுடையன அல்ல போலும்” என்று சொன்னாள்

34. கல் நெஞ்சினர்!

அம்ம வாழி, தோழி! சிறியிலை

நெல்லி நீடிய கல் காய் கடத்திடைப்,

பேதை நெஞ்சம் பின் செலச், சென்றோர்

கல்லினும் வலியர்மன்ற -

பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே. - ஜங் 334

தலைவி, “தோழியே! கேள். சிறிய இலைகளை உடைய நெல்லி மரங்கள் மிக்க மலையானது, உருகும்படி காய்கின்ற வெயில் வருத்தும் காட்டில் அறியாமையுடைய என் மனம் தன் பின் தொடர்ந்து வரப் பிரிந்து சென்றார் தலைவர். அவர் பல இதழ்களையுடைய மலர் போன்ற மை பூசப்பட்ட கண் கள் அழுது நீரைச் சிந்தப் பிரிந்தார் ஆதலால் அவர் கல்லை விட வன்நெஞ்சமுடையவர்" என்று தன் தோழியை நீேக்கிச் சொன்னாள்

35. காதலர் சென்ற வழி கடிது! அம்ம வாழி, தோழி! நம்வயின் நெய்த்தோர் அன்ன செவிய எருவை கற்புடை மருங்கில் கடு முடைபார்க்கும் காடு நனி கடிய என்ப - நீடி இவண் வருநர் சென்ற ஆறே ஜங் 335