பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“என் நெஞ்சே, நீ வாழ்க நம் தலைவியின் ஒளி பொருந்திய நெற்றி பசலை அடையவும், முயற்சியால் பொருள் ஈட்டுவதற்கு அடைவதற்கு அரிய காட்டு வழியில் பிரிந்து செல்லுதல் நல்லது என்று என்பின் நின்று எண்ணினை ஆயின் மிகவும் கொடியதை எண்ணினாய்

'இடிகளை உமிழும் கொண்டல், உலகத்துள் வெம்மை மிக மழை பெய்யாமல், நீங்குவதால் எவ் இடத்தும் மக்கள் தம் தம் இருப்பிடங்களினின்றும் நீங்கிச் செல்வதற்குக் காரணமான பலரும் சுட்டிக் கூறும் பாழான பாலை நிலத்தில் தம் உயிர் மறவர் புகுகின்ற மேனிலை உலகம் புகும் தன்மையவாய்த் தம் உடம்பை விட்டுப் போகுமாறு காண்ப வர்க்கு அச்சம் உண்டாகுமாறு பகைவரை வென்று விழுப்புண் அடைந்து வீழ்ந்திறந்தனர் வீரர் ஊர் மக்கள் தம் விருப்புக் குரிய தலைவர் பெயர் எழுதப்பட்ட குடவோலை கொள்ளும் பொருட்டுக் கயிற்றால் கட்டப்பட்ட குடங்களில், நடுவரால் பொறிக்கப் பட்ட இலச்சினையை ஆராய்ந்து பார்த்துப் பின் அழித்துக் குடங்களிலிருந்து ஒலைகளைக் கைவிட்டு எடுக்கும் ஆவணக்களரி மக்களைப் போன்று சிவந்த காதினை உடைய பருந்து அவ் வீரரின் உடம்பில் உள்ள குடல்களை வெளியே இழுத்துப்போடும் இத்தகைய இயல்புடைய கற்கள் பொருந்திய கவர்த்த வழியில் செல்லின், அவ் வழியில் உள்ள சிறிய ஊர்களில் பொலிவு இல்லாத அடிப்பகுதியை உடைய இத்தி மரத்தின் புள்ளியுடைய நிழலில் மாலையில் இரவைக் கழிக்கப் படுப்போம் அல்லேமோ!

அப்போது நம்மால் துறக்கப்பட்ட இவளது நீர் ஒழுகும் கண்கள் நம் அகக் கண் முன் தோன்றிடும். அவை, சேர மன்னனின் படைத் தலைவனான வளைந்த வில்லையுடைய பெரிய கையை உடையவனும் இடைவிடாது கள்ளின் களிப்பை விரும்புபவனும் ஆகிய பிட்டன் என்பான் பகை மன்னருடன் செய்யும் அரிய போரில் செலுத்திய,திருந்திய இலைகளையுடைய வேல் பகைவர்க்குத் துன்பத்தை உண்டாக் குவது போன்று நமக்கும். பெருந்துன்பத்தைத் தரும். ஆதலால், இப்போது பிரிந்து.செல்லும்கருத்தைக் கைவிடு வோமாக, எனத் தலைவன்.தன் நெஞ்சை நோக்கியுரைத்தான்