பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

போகும் அதனால் எழுப்பப்பட்ட செம்மண்ணான நிறம் பொருந்திய புழுதி அகன்ற சிவந்த வானம் போல் தோன்றும் அத்தகைய இடம் அமைந்த காட்டில் நம் காதலி நமக்குத் துணையாக வரும்படிச் செல்வோம் என்னாது அவளைப் பிரிந்து இங்கே வந்து தங்கிய அளவிலே வருந்துகின்றனை, என்னை நின் பேதைமை”என்று பொருள் வயின் பிரிந்த தலைவன் இடைவழியில் தன் நெஞ்சிற்குக் கூறினான்

337. பிரிந்து நீ செல்வாயோ?

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்க முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் மண் பசு வறந்த ஆங்கண், கண் பொரக் கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள எறி பருந்து உயவும் என்றுழ் நீள் இடை வெம் முனை அருஞ் சுரம் நீந்தி - சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் மை எழில் உண்கண் கலுழ - ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?

- ஆலம்பேரி சாத்தனார் அக 81 “எம் தலைவ! எம்மைப் பிரிந்து சென்று தேடப்படும் பொருளுக்குச் சிறந்த உம் உள்ளம் உம்மைத் தூண்டுதலால், சினம் மூண்டு எழுந்த பகைவரின் ஒளிரும் வேலையுடைய போர்க்களத்தினை யானைகள் மடிய வெல்லும் மிக்க வன்மையுடைய கடலன்' என்பவனின் விளங்கில் என்ற மூதூரைப் போன்ற இன்பமும் அழகும் நிரம்பிய எம் அழகிய மையுண்ட கண்களையுடைய தலைவி பிரிவாற்றாது அழுது புலம்புமாறு, விடியற்காலத்தில் எழுந்து உலாவிய தன் இரையைக் கொள்வதில் வல்லமையுடைய கரடி, உயர்ந்த