பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“நெஞ்சே, வலப்பக்கமாக சுரிந்து மலரும் வெண் கடம்பின் மணம் கமழ்கின்ற புதிய மலர்களைச் சுருண்ட தலைமயிரின் கண் தலையாட்டம் போல் அசையுமாறு அணிந்து, உரல் போன்ற அடியை உடைய இளம் பெண் யானை காட்டில் அலறுமாறு அதன் ஆண் கன்றைப் பிரித்துக் கொண்ட மகிழ்ச்சி உடையவராய், ஆரவாரம் மிக்கார் ஆயினர் வலிய அடிமரத்தை உடைய வெண்கடம்ப மரத்தின் வளமான கொம்பைப் பிளந்து அதனின்று உரித்த பெரிய வெண்மையான நார்க் கயிற்றால் யானைக் கன்றை அழுந்தக் கட்டிக் கொணர்ந்து பெரிய கொடிகள் அசையும் கடைத் தெருக்களையுடைய ஊரில் கள் விற்கும் நல்ல வீட்டின் வாயிலில் பிணிப்பர் அவர் தம் வேட்டுவத் தொழிலே அல்லாது வேற்றுத் தொழிலை அறியார் அத் தகைய வேடர்க்குத் தலைவன் புல்லி அவனது பரந்த இடத்தை உடைய நல்ல நாட்டில் உள்ள திருவேங்கட மலையைக் கடந்த பின்பும், நெய்தல் மலரின் அரும்பு மலர்ந்த ஒளியுடைய மலரைப் போன்ற அழகையுடைய குளிர்ந்த கண் களையுடைய காதலியின் குணங்கள் தொலைவில் சென்றவர் என்னாது அன்பு மிகவும் செலுத்தலால் இங்கும் நம்மை வந்து அடைதற்கு வந்தன” என்று தலைவன் இடைச் சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லினான்

339. விரைவில் தலைவர் வருவார் 'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும் உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் அறவாஅலலா அவா எனப பல புலநது, ஆழல் - வாழி, தோழி! - சாரல், ஈன்று நாள் உலந்த மெல் நடை மதிப் பிடி, கன்று, பசி களைஇய, பைங் கண்‘ய்ானை முற்றா மூங்கில் முளை தருபு, ஊட்டும் வென் வேல் திரையன் வேங்கட-நெடு வரை நல் நாள் பூத்த நாகு இள வேங்க்க நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை