பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 253

நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து. துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், வருதும், யாம் எனத் தேற்றிய பருவம்காண் அது; பாயின்றால் மழையே.

- காட்டுர்கிழார் மகனார் கண்ணனார் அக 85 “என் தோழியே வாழ்க! அழகான நெற்றி பசலை கொள்ளவும், பெரிய தோள் மெலிந்திடவும், உண்ணாமை யால் ஆன வருத்தத்தால் உயிர் நீங்க மெலிவை அடைந்து, நாம் இந் நிலையை அடைந்திட நம்மை விட்டுப் பிரிந்து சென்றார் நம் தலைவர் ஆதலால் அவர் அறமுடையவர் அல்லர்’ என்று இப்படிப் பலவும் சொல்லி வெறுத்துத் துன்பத்தில் அழுந்தாதே, ஆற்றியிரு

மலைச் சாரலில் உள்ள அணிமை நீங்க மெல்லிய நடை வாய்ந்த இளைய பெண் யானை அதன் கன்றின் பசியைப் போக்குவதற்குப் பசுமையான கண்ணையுடைய ஆண் யானை மூங்கிலின் இளைய முளையினைக் கொண்டு வந்து உண்ணச் செய்யும் இத்தகைய இயல்பு கொண்ட வெற்றி பொருந்திய வேலையுடைய திரையன்' என்பவனின் வேங்கடம் மலையில் நல்ல நாள் காலையில் நறு மணமுடைய மலர்களின் பூந்தாது படிந்த புள்ளிகளுடன் கூடிய வரிகளை உடைய மயில், தேனை உடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் கமழும் கிளையிலிருந்து தன் துணையை அழைத்திடும் இந் நிகழ் வுக்குக் காரணமான விரைந்து வரும் குளிர்ந்த கார்ப்பருவமே நாம் வருவேம் எனத் தெரிவித்த பருவமாகும் அதற்குள் மழையும் பரவுகின்றது அதை வந்து பார் நம் தலைவர் இப்போதே வருவார்’ என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுவித்தாள்”

340. அணைந்து மகிழ்வாய் காதலியை தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, நல்கூர் சீறுர் எல்லித் தங்கி, குடுமி நெற்றி நெடு மரச் சேவல்