பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 255

உருத்து எழு குரல குடிஞைச் சேவல், புல் சாய் விடரகம் புலம்ப, வரைய கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, களரி பரந்த கல் நெடு மருங்கின், விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் மை படு திண் தோள் மலிர வாட்டி, பொறை மலி கழுதை நெடு நிரை தழிஇய திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் கொல்லை இரும்புனம் நெடிய என்னாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ தானே - தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், இடு மணற் பந்தருள் இயலும் நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

- மதுரைக் காஞ்சிப் புலவர் அக 89 “தேனை வார்த்துக் கலந்த பாலைக் குடிக்க வேண்டி, கோல் கொண்டு அச்சப்படுத்திடவும் கொள்ள மறுத்து மணல் பரப்பிய பந்தலுக்குள் அங்கும் இங்கும் ஒடும் இயல் புடைய நீண்ட மென்மையான மூங்கில் போன்ற தோளை யுடைய மாநிறத்தையுடையவள் என் மகள்

அவள் எல்லாவற்றையும் அழிக்கும் கதிர்களையுடைய ஞாயிறு வானத்தில் நடுநின்று காய்தலால் மிக்க மழைநீர் வற்றிப்போன கானலையுடைய அகன்ற பாலையின் பரப்பையும் சினம் கொண்டு எழுந்த குரலையுடைய பேராந்தையின் சேவல் பசும் புற்களும் அழிந்திட்டால் தம் பொந்துகள் தனிமைப்பட அவற்றை விட்டு அகன்று பறந்து போய் மலையில் இருந்து, அம் மலையினின்றும் சரியும் கற்கள் உருண்டு விழும்போது ஏற்படும் ஒசை போன்று குரலை உடையனவாய் மாறி மாறி