பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 265

நன்றே, கானம் நயவரும் அம்ம; கண்டிசின் வாழியோ - குறுமகள்! - நுந்தை அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், பிடி மிடை, களிறறின் தோன்றும் குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!

- பாலை பாடிய பெருங்கடுங்கோ அக 99 "அன்புடைய இளையவளே, நீ வாழ்வாயாக வாளைப் போன்ற கோடுகளையுடைய புலியின் கொல்லும் கூரிய நகம் போன்ற, சிவந்த அரும்பு விரிந்த முள் நிறைந்த முருக்க மலர்கள் அவற்றில் வண்டுகள் மொய்க்கும் அதனால் வாடிய பூக்கள் கீழே விழுந்தன மதர்த்த அழகையும் சிறந்த அணி களையும் உடைய இளைய மகளிரின் பூண் அணிந்த கொங்கையைப் போன்ற அரும்புகள் கட்டவிழ்த்து, கோங்கின் மலருடன் தங்கி, அரும்பிய புலிப்பூக்கள் பரவப் பெற்றுள்ளன குளிர்ந்த பாதிரியின் அழகிய கிளைகளினின்று உதிர்ந்த பூக்களுடன் தாவிப் பூக்கம் பருவத்தை உடைய வெண் கடப்ப மலருடன் கலந்து விளங்குகின்றன வணங்குதற்குரிய தெய்வ முடைய கோயிலில் கலந்து கிடக்கும் மலர் களைப் போல அவை மணம் கமழும் பல்வேறு மலர்கள் உடைமையால் நாம் செல்லும் இக்காடு விரும்பத்தக்கதாய் உள்ளது. இளைய மகளே! நீ காண்பாயாக'

மற்றும் உன் தந்தை பகவரை வென்ற போர்க்களத்தில் பாய்ந்து போரிடலால் பூண் அழியப் பெற்ற கொம்பையும் பெண் யானைகள் சூழப் பெற்றனவுமான ஆண் யானை களைப் போல தோன்றும் சிறியவும் பெரியவும் என அள வுடைய குன்றங்களையும் உடையதாகின்றது” என்று உடன் போக்கில் வந்த தலைவி மருளக் கூறினான்

347. துன்பத்துக்கு யாது காரணம்? அம்ம வாழி, தோழி இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? - தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண் மழவர்