பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 25

மலை உறு தீயின் கரமுதல் தோன்றும் பிரிவுஅருங் காலையும், பிரிதல் அரிது வல்லுநர் - நம் காதலோரே! - ஜங் 338 தலைவி, "தோழியே, கேள் நம் தலைவர் மலைச் சாரலில் இலை உதிர்ந்து மலர்ந்து உயர்ந்து தோன்றும் நிலையை யுடையது இலவ மரம். அம் மலையில் தோன்றுகின்ற தீயைப் போல் காட்டு வழியில் தோன்றும் பிரிவதற்கு அரிய காலத்தி லும்கூட அரிதாய்ப் பிரிதலில் வல்லவர் ஆயினர்" என்றாள்.

39. காதலர் நாட்டில் மாலை இல்லையோ? அம்ம வாழி, தோழி! சிறியிலைக் குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணரீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே? - ஐங் 339 தலைவி, "தோழியே, கேள். சிறிய இலைகளையும் குறுகிய கிளைகளையும் உடைய வேம்பின் இனிய பழத்தை உண்டற்கு வெளவால்கள் உயரப் பறக்கும் மாலைக் காலம் காதலை யுடைய நம் தலைவர் சென்ற நாட்டில் இல்லை போலும் இருப்பதாயின் இது நாம் குறித்த பருவம் எனக் கொண்டு வாராது இருக்க மாட்டாராதலால்' என்று மாலைப் பொழுது கண்டு கூறினாள்.

40. நினைதற்குரிய தகுதியை இழந்தோமோ?

அம்ம வாழி, தோழி! காதலர்

உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்?

விட்டுச் சென்றனர் நம்மே -

தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே. - ஐங் 340

தலைவி, “தோழியே! கேள் காதலர் நம்மை ஆற்றி இருத்தற்குரியவற்றைக் கூறிப் பிரிந்து சென்றாராக ஊரில் மூங்கில் காட்டில் உண்டான தீயைப்போல் அலர் எழுந்த தால் நாம் ஆற்றாமையுடையேம் என்பதை அறியாரோ? அன்றி அவர் நினைத்தற்குரிய தகுதியை நாம் இழந்து விட்டோமோ? கூறுக!” என்று காலம் நீட்டித்ததற்குத் தோழிக்குச் சொல்லினாள்