பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேத்தன் : 269

களங்களையும் கடந்து போய்ச் சரிந்து விழும் மண்ணின் இடையூற்றுக்கு அஞ்சும் ஒரே துறையினை உடைய ஓடை யில் உள்ள இன்னாமையுடைய ஏற்றம் கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து மிக்க முடம்பட்டுத் தன்னந் தனியே ஒழிந்து கிடக்கும் உடல் வன்மை வாய்ந்த பொதி சுமக்கும் எருது

அந்த எருதை, பொலிவற்ற தலைமயிரை உடைய சிறுவர் அழகிய தளிரையுடைய இருப்பையின் அற்ற வாயையும் வெண்மையான துளையினையும் உடைய மலரை வில்லால் உதிர்ப்பர் அவற்றைத் தின்ன வரும் மானைத் துரத்தி எருதை உண்ணச் செய்வர். அத்தகைய மலையிடம் உள்ள சிறிய ஊர்களில் மாலைப் பொழுதில், நினக்கு இனிய துணையாய்த் தங்கிக் காலையில் புதிய தேனையுடைய நறுமணப் பூக்கள் பெரிய பாறைகளில் உதிர்ந்து கிடத்தலால் மணம் கமழும் - திருமண மனைபோல விளங்கும் - காட்டில் தின் குளிர்ந்த வாழ்க்கைத் துணைவியான குளிர்ந்த கூந்தலாள் என் தோழி யும் வருவாள் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறினாள்

351. மீளக் கூடாது வீணே! பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே - கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் காடு கால்யாத்த நீடு மரச் சோலை விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் கைப்பொருள் இல்லை.ஆயினும் மெய்க் கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன ஆளும் வறன் உறு குன்றம் பல் விலங்கினவே.

- கடுத்தொடைக்காவினார் அக 10