பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

"அறிவற்ற நெஞ்சே, பல இதழ்களைப் பெற்ற மென்மை யான மலர் போன்ற மை பூசப்பெற்ற கண்களையும், நல்ல யாழின் நரம்பு ஒலித்ததைப் போன்ற மிக இனிய சொல்லை யும் உடைய நலம் எல்லாம் பொருந்திய நம் காதலி இருக்கும் ஊரானது, தம் கொம்புகளின் பகைவர் மார்பினைக் குத்தி உழும் ஆண் யானைகளின் கூட்டம் செறியப் பெற்றுக் காடாய்ப் பரவி நீண்ட மரங்களையுடைய சோலையில் உள்ள ஒன்றை ஒன்று விரும்பும் அணில்கள் கூடி ஆடும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடம் அங்கு நிணம் தோய்தலால் வெண்மையான முனையையுடைய அம்பின் வேகம் பட இறந்தவர் பலர் அவர்களின் உடலைப் புதைத்த, எண்ணால் எல்லை இட்டு அறிய இயலாத தழையிட்டு மூடிய பதுக்கை களையுடைய சுரத்தில் பொருந்திய கவர்த்த வழிகள் ஆறலைக்கும் கள்வரின் கையகப்பட்டது என்பதை அறிந்து வழிப்போவார் இல்லையாயிற்று அச் சுரநெறி

அந்நெறியில், வந்த வழிப்போக்கரிடம் கைப்பொருள் சிறி தும் இல்லா விட்டாலும் அவரது உடலைப் பற்றிக் கொண்டு அவர் உயிரைப் போக்காமல் விட்ட தவற்றுக்காகப் பெரிய ஆண் யானைகளின் கொம்புகளையும் புலித் தோலையும் தண்டமாகக் கொடுக்கச் செய்கின்ற அறப் பண்பு சிறிதும் இல்லாத எயினர் மன்னன் ஆளும் வறண்ட பல குன்றுகள் இடையிடையே குறுக்கிட்டுக் கிடக்கின்றன” என்று பாலை நிலத்து இடையில் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைத்தான்

352. வருவார் தலைவர் விரைவில்

உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி வருவர் - வாழி, தோழி - அரச யானை கொண்ட துகிற் கொடி போல அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி ஒடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர மழை என மருண்ட மம்மர், பல உடன் ஒய்களிறு எடுத்த நோயுடைய நெடுங் கை தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்