பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 271

அத்தக் கேழல் அட்ட நற் கோள் செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்பக், குருதி ஆரும் எருவைச் செஞ் செவி மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட புண் தேர் விளக்கின் தோன்றும் விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ அக 111 தோழி வாழ்க! இப்படி வருந்தாதே. பட்டத்து யானை தன்மீது கொண்ட துகில் கொடியைப் போல் ஓடைக்குன்றம் என்ற மலையுச்சியில் சுழலுகின்ற ஞெமை’ என்னும் மரத்தினது உயர்வான கிளையில் கட்டப் பெற்ற சிலம்பியின் கூடானது மேல் காற்றால் அசைகின்றது. அதை முகில் எனக் கருதி மயங்கிய மயக்கத்தை உடைய, நீருக்காக அலைந்து களைத்த ஆண் யானைகள் பலவும் ஒருங்கே உயரத் துக்கிய வருத்தத்தை உடைய நீண்ட கைகள் புகழைத் தொகுத்துக் கூறும் கூத்தரின் 'தும்பு’ என்ற இசைக்கருவி போல் ஒலிக்கும். அத்தகைய இடமான வழியில் பதுங்கிக் கிடந்து ஆண் பன்றியைக் கொன்றதால் நல்ல இரையைக் கொண்ட ஆண் செந்நாய் விரைவாக இழுத்துச் செல்லும். அப் பன்றியின் இரத்தத்தைப் பருகும் கழுகுகளின் சிவந்த காதுகள் வீரர்கள் நெருங்கிச் சென்று போரிடும் போர்க் களத்தில், இரவுப் பொழுதில் கையில் கொண்ட வீரர்களின் புண்களை ஆராயும் விளக்குகளைப் போல் தோன்றும். இத்தகைய இயல்பு கொண்ட வான் தோயும் விளக்கம் பொருந்திய மலையைக் கடந்து பொருள் ஈட்டச் சென்றவர் நம் தலைவர்.

தமக்குப் பொருள் உள்ள அளவுக்கு மகிழாதவராய்ப் பகைவர் இகழும் நெஞ்சத்துடன் கூறும் அம்பு போலும் சொல்லுக்கு நாணம் கொண்டு சென்றவர் உன்னை நினைந்து மீண்டு வருவர். அவர் வரும்வரை ஆற்றி இருப்பாயாக’ என்று தலைவன் பிரிவின் போது தோழி தலைவியிடம் கூறினாள்.

353. அழாமல் இருப்பேன்

நன்று அல் காலையும் நட்பின் கோடார், சென்று வழிப்படுஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,