பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 273

அவனுக்கு ஏற்படாத வண்ணம் தம் அரணில் வைத்துக் காப்பாற்றிய பல வேற் படையை உடையவர் கோசர். அவரது புதிய கள்ளின் மணம் கமழும் 'நெய்தலம் செறு என்னும் வளம் பொருந்திய நல்ல நாட்டைப் போன்ற என் தோளைக் கூடி ஆரவாரம் மிக்க பழைய ஊர்ப் பெண்டிர் அலரைச் சொல்ல, நமக்கு அருள் செய்யாமல் எம்மைவிட்டுச் சென்றார் நம் தலைவர்.

எப்போதும் கல்லைப் பொருது மெலிவு அடையாத வலிய அடியை உடையவன்; வலிமை மிக்க மூங்கில் குழாயில் இட்ட உணவை உடையவன்; தன் நாட்டு எல்லையைக் கடந்து தொலைவில் உள்ளனவாயினும் கவரும் சமயத்தைப் பார்த்துப் பகைவர் ஆக்களைப் பாதுகாத்து வாழும் உணவு மிகுந்த அரண்களில் போய்க், குவிந்த இமிலையுடைய காளை களுடன் கூடிய பகைப்புலத்து ஆக்களைக் கவர்ந்து செலுத்து பவன்; செறிந்த கரிய பூணையும் நெய் மிக்க தண்டையும் உடைய நீண்ட வேலையும் விழா நிகழ்ந்தது போன்ற கொழுவிய பல உணவுகளையும் உடையவன்; பகைவர்க்குப் புறம் கொடாத பாணன். அத் தகையவனின் நல்ல நாட்டுக்கு அப்பாற்பட்ட வழியில் செல்பவள் ஆகிய புதியவரைக் கொன்றை ஆறலைப் போர் தாங்கள் கையாண்ட படைக் கலத்தைக் கழுவிய சிவந்த நிறம் உடைய அரித்தோடும் சின்னிரையுடைய மக்களின் நடமாட்டம் அற்ற துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையைத் தாண்டித் தொலைவில் நம் தலைவர் உள்ளார் என்பதைப் பலரும் கூறுதலால் அதைக் கேட்டுச் சிறுமை அடைந்து செயலற்றுக் கிடக்கும் எம் நெஞ்சில் உள்ள துன்பம் முழுவதும் ஒழியுமாறு அழாமல் இருத்தற்கு உரியோம்.

அவ்வாறு இருத்தலுக்கு, பருத்த அடிப் பகுதியில் கிளைத்த அசையும் அழகிய கிளைகளில் உள்ள தன் கூடா னது பெர்லிவில்லாது அழிய, தான் போக எண்ணிய இடத் துக்குப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல் என் உடல் இங்குத் தனித்திருக்க உயிர் பிரிந்து புறப்பட்டுத் தலைவர் வினையாற்றும் இடத்துக்குச் செல்வதாகுக அங்ங்னம் சென்ற பின்பு அழாமல் இருப்பதற்கு உரியோம்” என்று தலைவன் பிரிவின் போது தலைவி தோழிக்கு இயம்பினாள்.