பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 27

44. இளவேனில் வந்தும் அவர் வரவில்லை!

அவரோ வாரார்; தான் வந்தன்றே - நறும் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே - ஐங் 344 தலைவி, "நறுமணப் பூக்களையுடைய குரவ மரம் காய்த்த பாவையைக் கொய்யும் பருவமாகிய இளவேனில் வந்ததே அல்லாமல் அப்பருவத்தில் வருவேன் என்று சொல்லிப் பிரிந்து போன நம் தலைவர் வரவில்லையே!” என்று ஏங்கிக் கூறினாள்

45. புனலிக்கொடி பூத்தும் வரவில்லையே அவரோவாரார் தான் வந்தன்றேபுதுப் பூ அதிரல் தாஅய்க் கதுப்புஅறல் அணியும் காமர் பொழுதே - ஜங் 345 தலைவி,"புதிய மலர்களையுடைய புனலிக் கொடி பரந்து படர்ந்து மங்கையர் கூந்தல் போன்ற் மணற் பரப்பை அழகு செய்யும் அழகிய இளவேனிற் பருவம் வந்ததே அல்லாமல் அப்பருவத்தில் வருவேன் என்ற அவர் வரவில்லையே” என்று ஏங்கி இரங்கினாள்.

46. சென்றவர் திரும்பவில்லையே! என் செய்வேன்!

அவரோ வாரார்; தான் வந்தன்றே - அம் சினைப் பாதிரி அலர்ந்தெனச், செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே - ஐங் 346 தலைவி, ‘அழகிய கிளைகளையுடைய பாதிரிப் பூக்கள் மலர்ந்தன. சிவந்த கண்களையுடைய கருங்குயில் கூவும் இளவேனிற்பருவமும் வந்தது. அப் பருவத்தில் வருவேன் என்று கூறிவிட்டுப் போன தலைவர் வரவில்லை இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று கூறினாள்.

47. புன்கின் பூத்தும் திரும்பவில்லை! அவரோ வாரார்; தான் வந்தன்றே - எழில் தகை இள முலை பொலியப் பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே - ஜங் 347