பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தலைவி, "அழகும் தகுதியும் பொருந்திய இளமையான கொங்கைகள் பொலிவு அடையுமாறு பொரி போன்ற பூக்களை யுடைய புன்க மரத்தின் தளிர்களை அணியும் வேனிற் பருவம் வந்ததே அன்றி, அப் பருவத்தில் வருவேன் என்று தெளிவுபடுத்திப் போன தலைவர் வரவில்லையே” என்று வருந்திக் கூறினாள். -

48. வெண் கடப்பம் மலர்ந்தது! அவரோ வாரார்; தான் வந்தன்றே - வலம் கரி மராஅம் வேய்ந்து, நம் மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே - ஐங் 348 "வலப்பக்கமாகச் சூழ்ந்த மலர்களையுடைய மராமரம் மலர்ந்து நல்லமணம் கமழும் நம் குளிர்ந்த சோலையில் பூக்கள் மலரும் இளவேனிற் பருவம் வந்தபோதும், அப் பருவம் வரும் போது வருவேன் என்று கூறிச் சென்ற அவர் வரவில்லையே” தலைவி என்று இரங்கியுரைத்தாள். 49. மாமரம் தளிர்த்தும் மனமில்லை! அவரோ வாரார்; தான் வந்தன்றே - பொரி கால் மாஞ் சினை புதைய எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே - ஐங் 349 தலைவி, "பொரிந்த அடிப் பகுதியை உடைய மா மரம் தன் கிளைகள் மறையும்படி தீப் போலும் இளந் தளிர் களைத் தளிர்த்துத் திகழும் இனிய வேனிற் பருவம் வந்ததே அல்லாமல் அப் பருவத்தில் வருவேன் என்று கூறிச் சென்ற தலைவர் வரவில்லையே!” என்று நெஞ்சழுங்கச் சொன்னாள். 50. வ்ருவேன் என்றவர் வரவில்லை அவரோ வாரார்; தான் வந்தன்றே - வேம்பின் ஒண் பூ உறைப்பத், தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே - ஜங் 350 தலைவி, "வேப்ப மரத்தினது ஒளியுடைய மலர்கள்

உதிர்ந்து படிந்தன இனிமை பொருந்திய சொற்களை யுடைய தம் துணைவியரைத் தெளிவிக்கும் வேனிற்பருவ