பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 31

நின் நலத்தை நினைந்து அரிய செயல்வகையாகிய பொருட் பேறு பெருஞ்செல்வம் அடைகள்ன விடுத்து உடன் வந்தவர் ஒருவரிடத்தும் சொல்லாமல் மீண்டு வந்தேன்” என்றான் தலைவன்.

56. நினைத்தற்கு குணங்கள் இனியன: உள்ளுதற்கு இனியமன்ற - செல்வர் யான்ை பிணித்த ப்ொன் புனை கயிற்றின், ஒள் எரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்த நின் குணனே. - ஜங் 356 தலைவன், “செல்வம் உடையவர் தம் யானைகளைப் பிணித்த பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல், ஒள்ளிய தீ, தொடர்ந்துள்ள காட்டில் வினை மேற்கொண்ட நெஞ்சை மடக்கி மீளும் வகை தந்த நின் குணங்கள், நினைத் தற்கு இனிமையுடையனவாய் இருந்த்ன" என்றான் தலைவி யிடம்.

57. நின் நிறம் வனப்புற வந்தார்!

குரவம் மலர, மரவம் பூப்பச்

சுரன்அணி கொண்ட கானங் காணுஉ,

'அழுங்குக செய்பொருள் செலவு என விரும்பி,நின

நலங் கலிழ் மாமை கவின

வந்தனர் - தோழி - நம் காதலோரே! - ஐங் 357

தோழி, தலைவியிடம், "தோழியே! குரவமும் மரவமும் கொழித்துப் பூத்து விளங்குதலால் அழகு பெற்று விளங்கும் சுரமாகிய காட்டைக் கண்டு, அது, தான் வருவேன் என்று குறித்து வந்த பருவம் ஆவன்த அறிந்து, மேல் உளதாகும் பொருள் வயின் பிரிந்த செலவும் இனி ஒழிக என எண்ணி, தும் தலைவர் நின்னை விரும்பி நின் மாமை நிறம் வனப்பு மிக வந்தார்” என்று உரைத்தாள்

58. கண்ணிர் காதலரை வரச் செய்யும்

கோடுஉயர் பல் மலை இறந்தனராயினும், நீட விடுமோ மற்றே - நீடு நினைந்து,