பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 .ே அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி, உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே? - ஐங் 358 தோழி, "தலைவன் கொடுமுடிகளால் உயர்ந்த பல மலைகளைக் கடந்து சென்றாராயினும், நீ நெடுக நினைந்து அழுதலால் துடைக்குந் தோறும் நில்லாது அணையை உடைத்து எழும் நீர்ப் பெருக்கைப் போன்று வடியும் நின் கண்ணிர், காதலரை விரைய மீளச் செய்வதின்றிக் காலம் தாழ்த்தாது” என்று உரைத்தாள்.

59. நினைப்பின் இயல்பு அரும் பொருள் வேட்கையம் ஆகிநிற்துறந்து பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத் தவ நனி நெடிய ஆயின; இனியே, அணியிழை உள்ளி யாம் வருதலின் நணிய ஆயின - சுரத்திடை ஆறே. - ஐங் 359 தலைவன், “முன்னம் யாம் அடைவதற்கு அரிய பொருள் மீது அவாக் கொண்டேமாய் நின்னைப் பிரிந்து போனோம். அப்போது அச் சுரத்திடையுள்ள வழிகள் மிக மிக நீண்ட வாய் விளங்கின. இப்போது அழகிய இழைகளையுடைய நின்னை எண்ணி வருதலின் அவை மிக்க அண்மையில் உள்ளவாய் விளங்கின” என்று தலைவி அருமை கூறினான்.

60. நின்னை நினைந்தேன் வழி எளிது எரி கவர்ந்து உண்ட என்றுழ் நீள் இடை அரிய ஆயினும், எளிய அன்றே - அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பிக், கடு மான் திண் தேர் கடைஇ, நெடு மான் நோக்கி நின் உள்ளியாம் வரவே - ஜங் 360 தலைவன், “மான் போன்ற நீண்ட க்ண்களை உடைய வனே! தன்னிடம் எழுந்த வெப்பத்தால் எதிர்ப்பட்ட பொருள் களைப் பற்றி அழிக்கும் தீயும் வெயிலும் மிக்க நீண்ட இடைச் சுரம் கடப்பதற்கு அரியது என்றாலும் அவா மிக்க என் நெஞ்சம் நின் முயக்கத்தை மிகவும் விரும்புதலால் விரைவான செலவைப் பெற்ற குதிரைகள் பூட்டப்பட்ட