பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 35

"இனிய மாவின் தளிரே! கூட்டமான விலங்குகளைத் தொலைத்துத் தன் தமையன்மார் கொண்டு வந்த நினமான தசையுணவைக் கவர வருகின்ற பறவைகளை ஒட்டும் பெண்மை நலம் உடைய எயிற்றியைப் போல், பலவாய் மிக்க நலம் யாவரும் விரும்பும்படி பெற்றுள்ளாய்; ஆகவே இதற்கு எத்தகைய தவத்தைச் செய்தாய்?” என்று தலைவன் மாந் தளிரைப் பார்த்துக் கூறினான்

66. அறத்தோடு நின்ற போதில்.

அன்னாய், வாழி! வேண்டு அன்னை, என் தோழி

பசந்தனள் பெரிது எனச் சிவந்த கண்ணை

கொன்னே கடவுதி ஆயின், என்னது உம்

அறிய ஆகுமோ மற்றே -

முறி இனர்க் கோங்கம் பயந்தமாறே? - ஜங் 366

தோழி செவிலித் தாயை நோக்கி, “தாயே, வாழ்க! யான் கூறுவதை விரும்பிக் கேட்பாய், என் தோழி மிகவும் பசலை யடையப் பெற்று வேறுபடுகின்றாள் ஆகலின் இதற்குக் காரணம் யாது என நீ சினத்தினால் கண் சிவந்து அச்சப் படுத்தி வினவுகின்றாய்; ஆராயும்போது அது தளிரும் மலர்க் கொத்துகளும் உடைய கோங்கின் பூவைத் தந்தமை யால் மற்றவரால் எத்துணையும் அறியப்படாது' என இயம்பினாள்.

67. பேரோடு புணர்ந்தது உயிர்!

பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ, விரி இணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி, விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று, - அன்னை இவள் உயிரே

- ஜங் 367 தோழி செவிலித்தாயை நோக்கி, “தாயே! பொரிந்த அடிப் பகுதியை உடைய கோங்கின் பொன் போன்ற மலர்கள் விரிந்த கொத்துகளைக் கொண்ட வேங்கைப் பூவுடன் வேறுபட