பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேத்தன் : 41

80. திருமணம் செய்யும் பேறில்லை!

அத்த நீள் இடை அவனொடு போகிய முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற, யானே; கொடுத்தோர்மன்ற, அவள்ஆயத்தோரே. - ஐங் 380 செவிலித்தாய், "நீண்ட வழியையுடைய வழியில் அவனுடன் புணர்ந்து உடன் போகிய முத்துகளைப் போன்ற வெண்மையான பற்களையும் நகையையும் உடைய மடப்பம் உடைய தலைவிக்குத் தாயர் என்ற பெயரை யான் பெற்றேன் ஆயினும் அவளை அவனுக்கு உரியவளாகக் கொடுக்கும் பேற்றைப் பெற்றவர் அவளுடைய ஆயத்தாரே ஆவார் ஆகையால் யான் அப் பெயர் பெற்றும் பெறாதவன் ஆயி னேனே” என்று அலமந்து சொன்னாள்.

வழியில்-கண்டவர் உரை 81. பிரியாக் காதலர் பைங் காய் நெல்லி பலவுடன் மிசைந்து, செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் யார்கொல், அளியர் தாமே - வார்சிறைக் குறுங் கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கைக் காதலோரே? - ஐங் 381 'நெல்லிமரத்தின் பசுமையான காய்களைப் பலாவின் பழத்துடன் உண்டு, சிவந்த அடிமரத்தையுடைய செங்கடம்பு மரத்தின் இடை வெளியுடைய நிழலில் அமர்ந்திருப்பவர், நீண்ட சிறகுகளையும் குறுகிய காலையும் உடைய மகன்றில் பறவை போல் பிரிதற்கு அரிய இயல்புடைய காதலைப் பெற்ற வராய் உள்ளனர்” என்று வழியில் கண்டவர் உரைத்தனர்.

82. கண்டவர் உரை! புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல் திருந்து கழல் காளையொடு அருஞ் சுரங் கழிவோள்,