பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

காளை போன்ற காதலனுடன் நின் மகள் செல்வதை யாம் இடை வழியிலே பார்த்தோம்!” என்று கூறினர்

திரும்பி_வருதல் 91. மகள் வரும்படி கரை

மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந் நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென்மாதோ, வெஞ்சின விறல் வேல் காளையொடு அஞ்சிலோதியை வரக் கரைந்தீமே. - ஐங் 391 "குற்றம் இல்லாத இறகுகளையுடைய சிறிய கரிய காகமே, கொடிய சினமும் வெற்றியும் கொண்ட வேலை யுடைய காளை போன்றவனுடன் போன அழகிய சில வாகிய கூந்தலையுடைய என் மகனை வரும்படி கரை வாயாக. கரையின், அன்புடைய நின் முறைமைக்கு ஏற்ப, நின் கிளைக் காக்கைகளோடு இருந்து நீ உண்ணும் வகையில் பசுமையான ஊன் கலந்து சமைக்கப்பட்ட பசிய வலி யுணவைப் பொன்னால் செய்யப் பட்ட கலத்தில் இட்டுத் தருவேன்” என்று தாய் ஏங்கி உரைத்தாள்

92. வருந்துவதை ஒழிக! வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப் பரியல் வாழி, தோழி! பரியின், எல்லை இல் இடும்பை தரூஉம் - நல் வரை நாடனொடு வந்தமாறே. - ஐங் 392 தலைவி, "தோழியே நல்ல மலை சூழ்ந்த நாடனுடன் புணர்ந்து உடன் போய்த் திரும்பி வந்ததால், மூங்கிலினது அழகை இழந்த தோளும், வழியின் வெம்மை வருத்துதலால் நுட்பமான அழகு கழிந்த நெற்றியும் நோக்கி வருந்துதல் ஒழிக வருந்தினாயானால் அஃது முடிவற்ற துன்பத்தைத் தருமாகலான்' என்று வழி வரல் வருத்தம் கண்டு உரைத்தாள்