பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 47

93. விடலையின் பின் நின் மகள்

துறந்ததற்கொண்டு துயர் அடச் சாஅய், அறம் புலந்து பழிக்கும் அம்கணாட்டி! எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக வந்தனளோ நின் மட மகள் - வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே? - ஐங் 393 “நின்னைப் பிரிந்து சென்றதைக் காரணமாகக் கொண்டு துயரம் வருத்துதலால் உள்ளம் மெலிந்து அற நூல்களைச் சினந்து பழிக்கும் அழகிய விழியுடையாய்! வருத்தத்தினால் வருந்துகின்ற நின் நெஞ்சிற்கு இன்பம் ஏற்பட, கொடிய வலியும் வெண்மையான வேலையுமுடைய விடலையோன் முன்னால் வர அவன் பின்னால் நடந்து நின் மகள் வந்தாள்” என்று அயலார் அவர் தாய்க்குக் கூறினர்

94. திரும்பியவளைக் காட்டுவேன்! மாண்பு இல் கொள்கையொடு மயங்குதுயர் செய்த அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற வெஞ் சுரம் இறந்த அம் சில் ஒதிப், பெரு மட மான் பிணை அலைத்த சிறு நுதல் குறுமகட் காட்டிய வம்மே. - ஐங் 394 தாய், “சுற்றத்தினரே! சிறப்பில்லாத கொள்கையால் மயங்குதற்கு ஏதுவான துயரத்தைச் செய்த, அன்புடன் பொருந்தாத அறமும், அன்பின் தோன்றிய அருளை உடைய தாயிற்று கொடிய சுரத்தைக் கடந்து சென்ற அழகிய ஐஞ்சிறு கூந்தலையுடைய சிறிய பெண்மானைப் போன்ற இளையவள் மீண்டு வந்தனள்! வாருங்கள் காட்டுகிறேன்!” என்று தன் சுற்றத்தார்க்கு உவந்து கூறினாள்.

95. பாலை வழி முடிந்தது முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச் கடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும் இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம், மென்மெல ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து