பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 # அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கறங்கு இசை அருவி வீழும்,

பிறங்கு இருஞ் சோலை மலை கெழு நாட்டே. - ஜங் 395

தலைவன் தலைவியை நோக்கி, "இளையவளே! உலர்ந்த மூங்கிலில் தோன்றிக் காற்றினால் மிகுந்து பெருகிய தீயின் ஒளிவிடும் நீண்ட ஒழுங்கு, கற்பிளவுகளிலும் மலைக் குகை களிலும் முழங்கும் கொடிய செல்வதற்கரிய காட்டை நாம் நீங்கிவிட்டோம் ஆதலால், இனி மலர்களுடன் கூடி ஒலிக்கும் ஒசையையுடைய அருவிகள் விழும் நாட்டிலே மெல்ல நடந்து செல்வாயாக!” என்று உரைத்தான்.

96. பகல் விருந்தாகச் செல்வோம்! புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின் கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச் கரத்திடை அயர்ச்சியை ஆறுகம் - மடந்தை, கல் கெழு சிறப்பின் நம் ஊர் எல் விருந்தாகிப் புகுகம், நாமே. - ஐங் 396 தலைவன் தலைவியை நோக்கி, “பெண்ணே! பொறி போன்ற புள்ளிகளையுடைய வேங்கை மர்த்தின் பொன் மயமான பூங்கொத்துகளைக் கொய்து நின் கூந்தலின் அயல் யான் குடும் அளவு மெல்லப் போய், சுரத்தில் நடந்ததால் உண்டான அயர்ச்சியைப் போக்குவாயாக. மேலும் மலை களையுடைய நம் ஊருக்கு நாம் பகலில் வருகின்ற விருந்தின ராய்ப் போவோம்!” என ஆறுதல் உரைத்தாள்.

97. என் ஆயத்தார்க்குக் கூறுக! 'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரம் நனி வாராநின்றனள் என்பது முன்னுற விரைந்த நீர் உரைமின் - இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே. - ஐங் 397

தலைவி, “கீழே கவிழ்ந்து விளங்கும் நிறை மயிர் பொருந்திய கழுத்தையுடைய செந்நாயின் ஆண் குட்டியை