பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை

海 翻 ● ● * ● - * * * 事 攀 避 歌 拳 零 拳 ● * . . ->>శ్రీ<రభథ>ఃశ* . . . . . . . . • • • • • • • • • • • • • •

101. இந்த நல்லவர்கள் யாரோ?

வில்லோன் காலன கழலே தொடியோள் மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல்? அளியர் தாமே ஆரியர் கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி, வாகை வெண் நெற்று ஒலிக்கும், வேய் பயில் அழுவம் முன்னியோரே.

- பெரும்பதுமனார் குறு 7 “ஆரியக்கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் போது கொட்டுனின்ற பறையைப் போல, மேல் காற்றானது தாக்குதலால் நிலை கலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள் ஒலித்தற்கு இடமாகிய மூங்கில் செறிந்த பாலை நிலப் பரப்பைக் கடந்தும் செல்ல நினைத்து. வருபவர்களுள், வில்லினை உடைய இவ் ஆடவனது காலில் வீரக் கழல்கள் உள்ளன தோள்வளையை அணிந்த இம் மகளின் மெல்லிய அடியின் மேல் சிலம்புகள் உள்ளன. இந் நல்லோர் யாவரோ? இவர்கள் இரங்கத் தக்கவர்கள்” என்று ஊரினர் உரைத்தனர்

102. அவள் நாணும்படி வருகிறாள்

யாய் ஆகியளே விழவு முதலாட்டி பயறுபோல் இணர பைந்தாது படிஇயர்.