பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 55

108. யார் உன்னைப் பிரிய எண்ணுவர்? நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய, யாரோ பிரிகிற்பவரே? - சாரல் சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும் தேம் ஊர் ஒண்ணுதல்! - நின்னொடும், செலவே.

- சேரமான் எந்தை குறு 22 ‘மலைச் சாரலானது அழகு கொள்வதற்குக் காரண மாக, வலமாகச் சுரிந்த வெண்கடப்ப மலரையுடைய வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில், மணக்கின்ற நன்மணம் பரவிய விளக்கத்தையுடைய நெற்றியையுடையாய், துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையையாகி நீ இங்கே தனியே இருக்க நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலுடையவர் யாவர்? தலைவர் செலவு நின்னுடனே அமைவது ஆகும்” என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள் 109. என் அழகு பாழாகிறதே! கன்றும் உண்ணாது, கலத்தினும் படாஅது, நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, பசலை உணி இயர் வேண்டும் - திதலை அல்கல் என் மாமைக் கவினே.

- வெள்ளிவீதியார் குறு 27 “நல்ல இனப் பசுவின் இனிய பாலானது அப் பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்திலும் கறந்து கொள்ளப் படாமலும் தரையிற் சிந்தி வீணாவது போலத் தேமல் படர்ந்த அல்குலினிடத்து எனது மாமையாகிய பேரழகு எனக்கும் அழகு பயவாமல் என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல் பசலை உண்ணும் நிலையினதாயிற்று” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறினாள்.

110. துன்பம் அறியாது உறங்கும் ஊர்!

முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? ஒரேன், யானும் ஓர் பெற்றி மேலிட்டு,