பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 61

புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?

- அள்ளுர் நன்முல்லை குறு 67 "தோழியே கிளி தன் வளைந்த அலகினிடத்திலே கொண்ட வேம்பினது ஒளி வீசும் ப்ழமானது, புதிய பொற் கம்பியின் ஊடு செலுத்தும் பொற்கொல்லரது முனை மாட்சிமைப் பட்ட கூரிய கைந் நகத்தில் கொண்ட பொன் அணிகலனிற்குரிய ஒரு காசை ஒத்துக் காணப்படும். நிலம் கரிந்துள்ள கள்ளியை உடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர் என்னை நினையர்ரோ?” என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

122. இவளிற் சிறந்த செல்வம் உண்டோ? மருந்து எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே - அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இளமுலை, பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், கல் கெழு கானவர் நல்குறு மகளே.

- கருவூர் ஒதஞானி குறு 71 "நெஞ்சே! தோற்றிய தேமலை உடைய அழகிய பெருமை யையுடைய இளைய முலையையும் பெரிய தோளையும் நுண்ணியதாகிய இடையையும் உடைய, கற்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வாழும் கானவன் பெற்ற மகள், காம நோய்க்கு மருந்தாவாள்; இன்பம் நுகர்வதற்குரிய செல்வமும் ஆவாள்” என்று தன் நெஞ்சிடம் தலைவன் தலைவன் இயம்பினான்

123. தோள் மெலிந்து வருந்துவது தவறோ? அம்ம வாழி, தோழி யாவதும், தவறு எனின், தவறோ இலவே - வெஞ் சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் அரிய கானம் சென்றோர்க்கு எளிய ஆகிய தடமென் தோளே.

- மதுரை மருதன் இளநாகனார் குறு 77