பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 63

கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி, ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. - மோசிகீரன் குறு 84 “கழலும்படி இட்ட தோள்வளையை உடைய ஆய் என்னும் வள்ளலுடைய மேகம் தவழும் பொதிய மலையில் வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத் தையும் ஒருங்கே பெற்றவளும் ஆம்பல் மலரைக் காட்டி லும் குளிர்ச்சியை உடையவளுமான மகள் யான் தழுவிய போது தான் வியர்வை அடைந்ததாகக் கூறினாள் அங்ங்னம் என் தழுவல் அவளுக்கு வெறுப்பு உண்டாக்குவதற்குரிய காரணத்தை அப்பொழுது அறிந்திலேன்; ஆயினும் இப் பொழுது அறிந்தேன்” என்றாள் செவிலித்தாய்

126. இனி எங்ங்னம் ஆற்றுவேன்: அம்ம வாழி, தோழி! காதலர், நூல் அறு முத்தின் தண்சிதர் உறைப்பத், தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் பனி படு நாளே, பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுபவே

- காவன்முல்லைப் பூதனார் குறு 104 "தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக நம் தலைவல் நூலற்ற முத்துவடத்திலிருந்து உதிர்கின்ற முத்துகளைப் போலக் குளிர்ந்த பனித்துளிகள் துளிக்கும் "தாளி என்னும் கொடியை விடியற் காலையில் பசுக்கள் மேயும் பணி வீழ் கின்ற காலத்தில் தலைவர் பிரிந்து சென்றார். அங்ங்னம் அவர் பிரிந்து சென்ற நாள்களும் பலவாயின யான் எங்ங்னம் ஆற்றுவேன்” என்று தலைவர் வராததால் தலைவி தன் ஆற்றாமையைக் கூறினாள்.

127. இனிமையை எங்கே காண முடியும்? உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, ஊர் பாழ்த்தன்ன ஒமைஅம் பெருங் காடு இன்னா என்றிர் ஆயின், இனியவோ - பெரும, தமியோர்க்கு மனையே?

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 124