பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“தலைவனே! உப்பு வணிகர் பலர் கூடித் தங்கியிருந்து கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் உடைய ஊரானது பாழ்பட்டுக் கிடப்பது போன்ற தோற்றத்தை உடைய ஒமை மரங்கள் வளர்ந்த பெரும் பாலைநில வழி யானது செல்லுதற்குத் துன்பமுடையது என்று கூறித் தனியே செல்லக் கருதுகின்றீர். தலைவரைப் பிரிந்த தனிமையுடைய மகளிருக்கு வீடுகள் மட்டும் இனிமை தருவனவோ? அல்லவே!" என்றுரைத்தாள் தோழி

128. எங்கே செல்வார் அவர்

நிலம் தொட்டுப்புகாஅர்; வானம் ஏறார்;

விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரின்,

கெடுநரும் உளரோ? நம் காதலோரே.

- வெள்ளிவிதியார் குறு 130

"தோழியே! நம்முடைய தலைவர் நிலத்தைத் தோண்டி உள்ளே புகமாட்டார், விண்ணகத்தில் பறந்து மறைந்து விட மாட்டார், குறுக்கிடுகின்ற பெரிய கடலின்மேல் காற்றினால் நாவாய் வழி கடந்தும் செல்லார், நாடுகள்தோறும், ஊர்கள் தோறும், முறையாக குடிகள்தோறும், ஆராய்ந்தால் அகப் படாமல் தப்புவாரும் உளரோ” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் உரைத்தார்.

129. என் நெஞ்சு விரைகின்றது

ஆடு அமை புரையும் வனப்பிக் பனைத்தோட் பேர் அமர்க் கண்ண் இருந்த ஊரே நெடுஞ்சேண் ஆர் இடையவே, நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து ஒர் ஏர் உழவன் போலப், பெரு விதுப்பு உற்றன்றால், நோகோ யானே.

- ஒரேருழவனார் குறு 131 "அசைகின்ற மூங்கிலை ஒத்த அழகினையும் பருத்த தோள்களையும் பெரிய காதற் போர் செய்கின்ற கண்களை