பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 69

நிலத்தைக் கடந்து நெடுந்துரத்தில் தங்கி இருத்தலை உடைய தலைவர் இவ் வன்மையை எவ்வாறு பெற்றார்?" என்றாள் பிரிந்த தலைவனை நினைந்த தலைவி

138. அவளைப் பிரியின் உயிர் வாழ்தல் அரிது!

மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை

இரும் பனம் பசுங் குடைப் பலவுடன் பொதிந்து

பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன

நறுந் தண்ணியளே, நல்மா மேனி,

புனற் புணை அன்ன சாய் இறைப் பனைத் தோள்

மணத்தலும் தணத்தலும் இலமே!

பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

- - சிறைக்குடி ஆந்தையார் குறு 168

“நெஞ்சே, நல்ல அழகிய நிறம் பெற்ற மேனியை உடைய தலைவி மாரிக் காலத்தில் மலரும் பிச்சியினது நீர் ஒழுகும் செழுமையான அரும்புகளைப் பெரிய பசுமையான பனை ஒலைக் குடையில் ஒருங்கே வைத்து மூடி, பெருமழை பெய்தலைச் செய்யும் விடியற்காலத்தே விரித்து விட்டாற் போன்ற நறுமணத்தையும் குளிர்ச்சியையும் உடையவள்; நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற வளைந்த நிலவினை உடைய மூங்கிலனைய அவள் தோள்களைப் பொருந்துதலும் பிரிதலும் இல்லை யாயினோம்; பிரிவோமாயின் உயிர் வாழ்தல் அதனைக் காட்டிலும் இயலாததது ஆகும்” என்று பொருள் தேடித் துணிந்த தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

139. அருளை மதிப்பவர் இல்லை

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னார், நத்துறந்து, பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப் பொருளே மன்ற பொருளே, அருளே மன்ற ஆரும் இல்லதுவே. - வெண்பூதி குறு 174