பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

"தோழியே பெய்ய வேண்டிய மழை பெய்யாது நீங்கிய தனிமை மிக்க பாலை நிலத்தில் கவைத்த முள்ளை உடைய கள்ளியினது காய் வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலி யானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளை உடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களை நீங்கச் செய்யும் அரு வழிகள் கடத்தற்கரியன என்று கருதாராகி, நம்மைப் பொருள் தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின் இந்த உலகத்தில் செல்வமே உறுதிப்பொருளாகி விடும். அருள் என்பது தன்னை ஏற்றுக் கொள்வார் யாரும் இல்லாத தாகி விடும்” எனத் தலைவி தோழிக்குக் கூறினாள்.

140. பொருள் பெற்றவுடன் திரும்புவார்! பழுஉப்பல் அன்ன பரு உகிர்ப் பா அடி இருங் களிற்று இனநிரை ஏந்தல் வரின், மாய்ந்து, அறை மடி கரும்பின் கண் இடை அன்ன பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, எய்தினர் கொல்லோ பொருளே - அல்குல் அவ் வரி வாடத் துறந்தோர் வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?

- கச்சிப்பேட்டு நன்னாகையார் குறு 180 'அல்குலினது அழகிய தேமல் நிறம் கெடும்படி நம்மைப் பிரிந்த தலைவர், பேயின் பற்களைப் போன்ற பருத்த நகங் களை உடைய பரவிய அடிகளைப் பெற்ற பெரிய களிற்றுக் கூட்டத்தின் தலைவனாகிய யானை வந்து கைப்பற்றிய தனாலே, அழிந்து பாத்தியினிடத்து வீழ்ந்த கரும்புகளின் இடையிடையே நின்ற ஒற்றைக் கரும்பு போல ஒற்றை மூங்கில் ஆங்காங்கே வளர்ந்துள்ள பாலை நிலத்தைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற நாட்டினி டத்துப் பொருளைப் பெற்றாரோ இல்லையோ?” என்று தோழி தலைவியிடம் இயம்பினாள்.

141. வினை முடித்து விரைவோம்!

இன்றே சென்று வருதும், நாளைக் குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,