பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 75

வளைந்த கோடுகளையுடைய பெரிய புலித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கின்ற உயர்ந்த மலைப் பக்கத்திலுள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றவராகிய தலைவர் இன்று வருவர் நீ வாழ்வாயாக, என்று தலைவியை நோக்கித் தோழி ஆற்றினாள்.

148. என் உயிர் நில்லாது அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே, யானே, தோடுஆர் எல்வளை ஞெகிழ, நாளும், பர்டு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே; அன்னள் அளியள் என்னாது, மா மழை இன்னும் பெய்யும், முழங்கி மின்னும் - தோழி, - என் இன் உயிர் குறித்தே.

- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் குறு 216 "தோழியே! நம் தலைவர் கேடில்லாத உயர்ந்த செல் வத்தைக் கொண்டு வரும் பொருட்டு பசுமையான இலை களைப் பெற்ற வாடாத வள்ளிக் கொடி படர்ந்த நாட்டைக் கடந்து சென்றார். யான் திரளாகப் பொருந்தியுள்ள வளைகள் நெகிழும்படி தலைவன் பிரிவினால் கவலையுற்றுப் படுக்கை யில் வீழ்ந்து துன்புற்றுக் கிடக்கின்றேன். கரிய முகில் என் துன்பத்தை எண்ணி 'இவள் இரங்குதற்குரியள்’ என்று எண்ணாமல் இன்னும் மழை பெய்யும் பொருட்டாக முழங்கி என்னுடைய உயிரைப் பறித்தலையே குறியாகக் கொண்டு மின்னுகின்றதே" என்றாள் தலைவி.

149. உயிருக்கு உயிர் விடர் முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம், கைந் நூல் யாவாம்; புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்; உள்ளலும் உள்ளாம் அன்றே - தோழி - உயிருக்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று இமைப்பு வரை அமையா நம்வயின் - மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.

- கொற்றனார் குறு 218