பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

"தோழி, தலைவர் நம் உயிருக்கு உயிரைப் போன்றவர். ஆதலின் முன்பு நம்மை இன்றி, இமைப் பொழுதளவேனும் பிரிந்திருந்தலைப் பொருந்தாதவர், இப்பொழுது நம்மை மறந்து சென்று அவ்விடத்தே தங்குதல் வல்ல தலைவர், திறத்தில் பிளவையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தி லுள்ள வெற்றி பொருந்திய பொற்றவைக்குப் பலி கடன் செலுத்துதலை யாம் செய்யோம்; கையில் காப்பு நூலைக் கட்டோம்; நற்குறியையும் பாரோம்; நற்சொல் கேட்கவும் செல்லோம் அவரை நினைத்தலையும் செய்யோம்" என்றாள் தலைவி

150. துயரமே பெரிதாயிற்று

கவலை யாத்த அவல நீள் இடைச் சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா நோயினும் நோய் ஆகின்றே - கூவற் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.

- கூவன் மைந்தன் குறு 224 “கிணற்றின் கண்ணே வீழ்ந்த குராற் பசு படும் துன்பத்தை இரவுப் பொழுதில் கண்ட ஊமையன் அதனை வெளியிட முடியாமையால் துன்புற்றது போல என் பொருட்டுத் தோழி படும் வருத்தத்தினால் துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன். துன்பம் தரும் யா மரங்கள் உள் கவர்ந்த வழிகளில் எம்மைப் பிரிந்து சென்ற தலைவரது கொடுமை நினைத்துத் துயிலாமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும் தோழியின் துன்பம் பெரியது” என்று வருந்தினாள் தலைவி.

151. என்னே ஊழியின் வலி! இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன் தலை ஒரி வாங்குநள் பரியவும், காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்றம்ம பாலே - மெல்இயல்