பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும், வருவர்கொல் வாழி - தோழி, பெர்ருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, கன்று இல் ஓர் ஆ. விலங்கிய புன்தாள் ஒமைய கரன் இறந்தோரே.

- கல்லாடனார் குறு 260 "தோழியே! நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும். புதலிடத்துள்ள போதுகளும் கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால் மலர்ந்தன. சுழித்த சங்கினால் செய்த வளையினால் விளங்கிய தோள்களும் நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும். ஆதலினால் பகைவரது நாட்டை வென்று அடிமைப்படுத்தி அவற்றால் வரும் பயன்களை நுகரும் தலைமை பொருந்தி, யானையையும் வளவிய தேரை யும் உடைய தொண்டைமான்களுக்கு உரிய சுரப் புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில் கன்றில்லாத ஒற்றைப் பசு வினை நிழல் காட்டித் தம்பால் வரச் செய்து தடுத்த புல்லிய அடியை உடைய ஒமை மரங்களுடைய பாலை நிலங்களைக் கடந்து சென்ற தலைவர் வந்து சேர்வார் என்றாள் தோழி தலைவியிடம்.

161. யாரும் அறியாது சென்றுவிடு! ஊஉர் அலர் எழ, சேரி க்ல்லென, ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை தானே இருக்க, தன் மனை; யானே, நெல்லி தின்ற முள் எயிறு தயங்க உணல் ஆய்ந்திசினால், அவரொடு - சேய் நாட்டு, விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், கரும்பு நடு பாத்தி அன்ன, பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 262 “ஊரிலே பழிமொழி உண்டாக, தெருவில் உள்ளோர் கல்லென்று ஆரவாரிக்க ஒயாமல் நம்மை வருத்துகின்ற