பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

காலம் உளதாதலை, அத் தலைவரைக் காலத்தில் நான் உணர்ந்தேன். என்றாள் தோழியை நோக்கித் தலைவி. 180. வலிமை எவ்வாறு பெற்றனளோ? நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர்.இடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி, அறுகனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுநள்கொல் தானே - ஏந்திய செம்பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த பாலும் பல என உண்ணாள், கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?

- கயமனார் குறு 356 “கையிலே ஏந்திய செம்பொன்னால் ஆன நற்கலத்தில் உள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிக்கன என்று கூறி, உண்ணாளாகிய திரட்சியான குறிய வளையல்களை அணிந்த தளிரை ஒத்த மென்மையை உடைய என் மகள் நிழலடங்கி அற்றுப் போன நீரில்லாத கடத்தற்கரிய பாலை நிலத்திடத்தே வீரக் கழலை உடைய தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று நீர்வளமற்ற சுனையின் பக்கத் தில் உலர்ந்த வெப்பத்தை உடைய கலங்கல் நீரை, 'தவ் வென்னும் ஒசைபட குடிக்க எவ்வாறு வலியளானாள் என்று செவிலித் தாய் பிரிவாற்றாது வருந்திக் கூறினாள்.

181. இனிய செயல் தானே கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, புல் அரை உகாஅய் வளி நிழல் வதியும் இன்னா அருஞ் சுரம் இறத்தல் இனிதோ - பெரும, - இன் துணைப் பிரிந்தே?

- செல்லூர்க் கொற்றன் குறு 363 “இனிய துணைவியைப் பிரிந்து கண்ணியைச் சுற்றிய கொம் புடைய தலைமையைக் கொண்ட நல்ல மலை எருது,